அரச குடும்பத்து மருமகன்.. சித்தார்த்துக்கு வந்த வரதட்சணை இவ்வளவா?.. சபிதா ஜோசப் ஓபன் டாக்

சென்னை: நடிகர் சித்தார்த் நடிகை அதிதி ராவை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் ஹைதராபாத்தில் இருக்கும் பழமையான கோயிலில் சிம்பிளாக நடந்து முடிந்தது. இரண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் செய்துகொண்ட இருவருக்கும் பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவரும் சூழலில்; இந்தத் திருமணம் பற்றி பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தவர் சித்தார்த். ஆய்த எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்த அவர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் ரிலீஸான சமயத்தில் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. இருந்தாலும் அந்தப் படத்தில் சித்தார்த்தின் நடிப்பும், அழகும் அவரை தொடர்ந்து ஹீரோவாகவே பயணம் செய்யும்படி அமைத்தது. அந்தப் படத்துக்கு பிறகு ஏராளமான படங்களில் நடிக்க ஆரம்பித்தார் சித்து.

siddharth aditi

இந்தியன் 2: பல படங்களில் நடித்தாலும் மிகப்பெரிய வெற்றி அவருக்கு கிட்டாமலேயே இருந்தது. அந்த சமயத்தில்தான் அருண்குமார் இயக்கத்தில் சித்தா படத்தில் நடித்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி சித்தார்த்துக்கு நிம்மதியை கொடுத்தது. ஆனால் அந்த நிம்மதி இந்தியன் 2வில் பறிபோனது. படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும் சித்தார்த் ஏற்றிருந்த சித்ரா அரவிந்தன் என்ற கதாபாத்திரம் பெரும் ட்ரோலுக்கும் உள்ளானது. இந்தியன் 2வுக்கு பிறகு சில படங்களில் கமிட்டாகியிருக்கிறார் அவர்.

அதிதியுடன் காதல்: இதற்கிடையே மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் பிரபலமான அதிதியுடன் சித்தார்த் மஹா சமுத்திரம் என்ற படத்தில் நடித்தார். அப்போது இரண்டு பேருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த சூழலில் சில மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. முன்னதாக சித்தார்த்து ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றார். அதேபோல் அதிதியும் திருமணம் செய்துகொண்டு விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பிளாக நடந்த திருமணம்: சூழல் இப்படி இருக்க சித்தார்த் - அதிதி ராவின் திருமணம் ஹைதராபாத்தில் இருக்கும் பழமையான கோயில் ஒன்றில் சிம்பிளாக நடந்து முடிந்தது. அந்தக் கோயிலை அதிதியின் குடும்பத்தினரே கட்டியதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. திருமணம் செய்துகொண்ட இருவருக்கும் பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் பத்திரிகையாளர் சபிதா ஜோசப் இருவரது திருமணம் பற்றி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

சபிதாவின் பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "சித்தார்த்தும், அதிதியும் ஏற்கனவே விவாகரத்து ஆனவர்கள். அவர்களுக்கு இது இரண்டாவது திருமணம். ஒரு படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். அதிதி ராவ் ஹைதரி ஒரு அரச குடும்பத்தை சேர்ந்த பெண். அவரது தாத்தா உள்ளிட்டோர் பிரிட்டிஷ் காலத்தில் ஹைதராபாத் சமஸ்தானத்துக்கு பிரதமர் பதவியில் இருந்தவர். அவர்களது கட்டுப்பாட்டில் பல இடங்கள் இருந்தன.

கணக்கே இல்லை: ஹைதரி வம்சத்தை சேர்ந்தவர் என்பதால்தான் அதிதியின் பெயரில் ஹைதரி என்ற சொல் இருக்கிறது. சித்தார்த் புடிச்சாலும் புளியங்கொம்பாக பிடித்திருக்கிறார். அதிதிக்கு இருக்கும் சொத்தை வைத்துக்கொண்டு சித்தார்த் வாழ்க்கையில் செட்டிலே ஆகிவிடலாம். அதிதியின் தரப்பு சொத்து; இனி வரப்போகும் பேரனோ, பேத்தியோ அவர்களுக்குத்தான் சொந்தமாகப்போகிறது. எனவே சித்தார்த்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வரதட்சணை என்பது கணக்கே இல்லாதது. கணக்கே இல்லாமல் இருக்கும் சொத்துக்களை பார்த்துக்கொள்ளுங்கள் என்ற அளவில்தான் அவருக்கு வரதட்சணை வந்திருக்கும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X