சோனா மீது ஆசை.. பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படித்தானாம்..வெங்கட் பிரபு, பிரேம்ஜி பற்றி பிரபலம் ஓபன்

சென்னை: விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படம் GOAT. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு அந்தப் படம் வெளியானாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதேசமயம் விஜய்யின் வில்லத்தனமான நடிப்பு அனைவரையும் மிரள செய்தது. இருந்தாலும் படத்தில் ஏதோ ஒன்று மிஸ் ஆனதாக அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறினார்கள். இந்தச் சூழலில் பத்திரிகையாளர் சபிதா ஜோசப் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி குறித்து பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

சென்னை 600028 படத்தின் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு சரோஜா, மங்காத்தா என வரிசையாக ஹிட்டுகளை கொடுத்தார். அதிலும் அஜித்தை வைத்து அவர் இயக்கிய மங்காத்தா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அது அஜித் மற்றும் வெங்கட் கரியருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்தது. அதனையடுத்து வெங்கட் பிரபுவின் மவுசும் தமிழ் சினிமாவில் அதிகரித்தது. ஆனால் அந்தப் படத்துக்கு பிறகு பெரிதாக அவரால் எந்த ஹிட்டையும் கொடுக்க முடியவில்லை.

GOAT: இப்படிப்பட்ட சூழலில்தான் விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு. முதன்முறையாக விஜய்யுடன் அவர் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு படத்துக்கு எழுந்தது. கடந்த வருடம் வெளியான அந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதேசமயம் விஜய்யின் வில்லத்தனமான நடிப்பை ரசிகர்கள் பாராட்டினார்கள். படமும் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றதாகவே கூறப்பட்டது.

அடுத்த படம்: கோட் படத்தை முடித்த வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வருடத்திலேயே அந்தப் படத்தின் பணிகள் ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால் கோட் பட வாய்ப்பு வந்ததால் அதற்கு வெங்கட் சென்றதாக தெரிகிறது. இப்போது எஸ்கேவுடனான படம் குறித்த பணிகளில் வெங்கட் பிரபு முழு கவனத்தை செலுத்திவருகிறார் என்றும் கோலிவுட்டில் தகவல்கள் கசிந்துகொண்டிருக்கின்றன.

Journalist Sabitha Joseph Talks about Venkat Prabhu And Premji Amaran
Photo Credit:

பிரேம்ஜி அமரன்: வெங்கட் பிரபு போலவே அவரது சகோதரர் பிரேம்ஜி அமரனும் சினிமாவில்தான் இருக்கிறார். இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முக திறமையை கொண்ட அவர் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் தவறாமல் இருப்பவர். சகோதரர் படம் மட்டுமின்றி மற்ற இயக்குநர்களின் இயக்கத்திலும் நடித்துவருகிறார். அந்தவகையில் அவரது நடிப்பில் கடைசியாக வல்லமை படம் ரிலீஸாகி சுமாரான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைகள்: வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகிய இரண்டு பேருக்குமே திருமணம் நடந்து முடிந்துவிட்டது. இப்போது அவர்களை சுற்றி பெரிதாக எந்த சர்ச்சையும் வருவதில்லை. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு அவர்களை சுற்றி பெரிய சர்ச்சை எழுந்தது. அதாவது வெங்கட் பிரபு படம் இயக்கி தருவதாக கூறி தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார் என்று இயக்குநர் சங்கத்தில் புகார் கொடுத்தார். அதுமட்டுமின்றி வெங்கட்டின் நெருங்கிய நண்பரும், பின்னணி பாடகருமான எஸ்.பி.சரண் மீதும் பாலியல் புகார் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சபிதா ஜோசப் பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர் சபிதா ஜோசப் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைக்காததால்தான் சோனா கவர்ச்சி நடிகையாக மாறினார். அப்படி இருந்தும் அவர் பெரிதாக ஜொலிக்கவில்லை. சிலர் சில படங்களில் அவருக்காக மட்டுமே அவரை ஒப்பந்தம் செய்திருப்பார்கள். அதாவது எப்படியாவது இந்தக் கடையில் டிஃபன் சாப்பிட வேண்டுமென்ற ஆசையில் அவரை புக் செய்திருப்பார்கள். அந்த மாதிரி ஆசை கொண்டவர்கள்தான் வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும். அந்த நேரத்தில் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி இருந்தார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X