தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு.. 2 பேருக்கும் வேறு ஆட்களுடனான தொடர்பே காரணம்? இஷ்டத்துக்கு பேசும் பிரபலம்
சென்னை:தனுஷ் கடைசியாக நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் தனது 50ஆவது படத்தில் நடித்து முடித்தார். அந்தப் படத்தை முடித்த கையோடு சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே அவர் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்திருந்தார். இப்போது இரண்டு பேரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கின்றனர். இந்தச் சூழலில் இரண்டு பேரும் பிரிவதற்கு காரணம் இதுதான் என்று பத்திரிகையாளர் சந்தோஷ் ஜோசப் என்பவர் சொல்லியிருக்கும் விஷயம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் தனுஷ். அவர் கடைசியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான அந்தப் படம் கோயில் நுழைவு போராட்டத்தையும், சாதிய ஏற்றத்தாழ்வையும், வெள்ளைக்காரர்கள் ஆட்சிக்காலத்தையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. முக்கியமாக கேப்டன் மில்லருக்கு போட்டியாக களமிறங்கிய சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கல் ரேஸில் பந்தயம் அடித்தது.

தனுஷ் அப்செட்: தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட ஹீரோவிடமே தோற்றுவிட்டோமே என்று தனுஷ் கொஞ்சம் அப்செட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க கேப்டன் மில்லர் படத்துக்கு அடுத்ததாக அவர் தனது 50ஆவது படத்தில் நடித்திருக்கிறார். அதனை அவரே இயக்கவும் செய்திருக்கிறார். படத்துக்கு ராயன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்தப் படத்தை மெகா ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இருக்கிறார். படத்தில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
அடுத்த படம்: ராயன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே சேகர் கம்முல்லாவின் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் தனுஷ். ஏற்கனவே வாத்தி படத்தில் நடித்து கையில் சூடுபோட்டுக்கொண்ட அவர் மீண்டும் ஏன் தெலுங்கு இயக்குநருடன் கைகோர்க்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டனர். ஆனால் வாத்தி படத்தில் விட்டதை இந்தப் படத்தில் பிடித்து தெலுங்கில் தனக்கென தனி மார்க்கெட்டை நிலைநாட்டும் நோக்கத்தில் அவர் இருக்கிறார் என திரைத்துறையில் பேச்சு ஓடுகிறது.
குபேரா: படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் தனுஷ் தாடியும், தம்பட்டையுமாக பிச்சைக்காரர் போல் இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் தனுஷின் கெட்டப்பே வேற மாதிரி இருக்கிறதே. அப்போ கதை எப்படி இருக்கும் என்று சமூக வலைதளங்களில் ஆர்வத்தோடு பேச ஆரம்பித்தனர்.இதற்கிடையே தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்திருந்தார் தனுஷ்.
விவாகரத்து: மீண்டும் இரண்டு பேரும் சேர்ந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பத்திருக்கின்றனர். இந்நிலையில் பத்திரிகையாளர் சந்தோஷ் ஜோசப் என்பவர் இருவரும் பிரிந்ததற்கான காரணம் குறித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஐஸ்வர்யாவும், தனுஷும் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னதாக பல காதல்களில் இருந்தார்கள்.
எதிர்ப்பு: பிறகு இருவரும் காதலித்தார்கள். அவர்களது திருமணத்துக்கு லதா குடும்பத்திலிருந்து பயங்கர எதிர்ப்பு இருந்தது. ஆனால் அதையும் மீறித்தான் திருமணம் நடந்தது. அதேசமயம் ரஜினி குடும்பத்திலிருந்து தனுஷின் அப்பா, அம்மாவுக்கு போதிய மரியாதை தரவில்லை என்று சொல்லப்படுகிறது. திருமணத்துக்கு பிறகும் பல காதல்கள் தனுஷுக்கு இருந்தன. ஐஸ்வர்யாவும் ஒரு நபரை காதலித்துவருகிறார்.
அவர் யோக்கியமா?: இருவரும் பிரிந்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா உதவி இயக்குநருடன் பழகி வருவதாக தனுஷ் தரப்பிலிருந்து கூறுகின்றனர். அதற்கு ஐஸ்வர்யா தரப்போ, தனுஷ் மட்டும் என்ன யோக்கியமா அவர் அன்றே பெரிய நடிகர் மகளுடன் நெருக்கமாக இருந்தவர்தானே என்று சொல்கிறார்கள். இன்னும் ஆறு மாதங்களில் விவாகரத்து கிடைத்துவிட்டால் தனது உறவினர் வட்டாரத்திலிருந்து தனுஷுக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என கஸ்தூரி ராஜா முடிவெடுத்திருக்கிறார். ஐஸ்வர்யாவுக்கும் அந்த உதவி இயக்குநரை திருமணம் செய்து வைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது"என்றார். சந்தோஷ் ஜோசப் சொல்லியதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











