7.5 மணி நேரம் கேம் சேஞ்சர்.. புரமோஷனுக்காக ஷங்கரை அசிங்கப்படுத்துறாரு எடிட்டர்.. பிரபலம் காட்டம்!

சென்னை: புதிய படங்களின் புரமோஷனுக்காக பழைய குப்பைகளை கிண்டி கிளறி பேசுவதெல்லாம் தேவையில்லாத ஆணி என மூத்த பத்திரிகையாளர் சுபைர், நரிவேட்டை படத்தின் எடிட்டர் ஷமீர் முகமதுவை விளாசி தள்ளியிருக்கிறார். சமீப காலமாக இப்படியொரு புரமோஷனுக்காக சர்ச்சைகளை கிளப்புவதை சினிமா பிரபலங்களே டிரெண்டாக மாற்றி வருகின்றனர் என்றும் ஒரு நல்ல கலைஞனுக்கு அடுத்தவரை அசிங்கப்படுத்துவது தேவையற்ற வேலை என்றும் சுபைர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என கொண்டாடப்பட்டு வந்த ஷங்கருக்கு கடந்த சில ஆண்டுகளாக பெரிய சரிவை அவரது சினிமா வாழ்க்கையில் சந்தித்து வருகிறார். இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து கேம் சேஞ்சர் படமும் ஷங்கருக்கு பெரிதாக கை கொடுக்காத நிலையில், அந்த 2 படங்களும் பயங்கர ட்ரோல் மெட்டீரியலாக மாறியது.

Journalist Subair slams supports Director Shankar in Game Changer Editor Shameer Muhammed

ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது உண்மை தான் என்றாலும், படத்தில் இருந்து வெளியேறிய பின்னர் ஒரு எடிட்டராக ஷமீர் முகமது இப்படி பேசியிருக்கக் கூடாது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

7.5 மணி நேரம் கேம் சேஞ்சர்: இயக்குநர் ஷங்கர் பெரிய பட்ஜெட்டில் படங்களை இயக்கி ஒரு டிக்கெட் வாங்கும் ரசிகருக்கு உலக அதிசயங்களையும் புதிய புதிய இடங்களையும், தொழில்நுட்பக் காட்சிகளையும் கடத்துவதில் கெட்டிக்காரராக பெயர் எடுத்த ஷங்கர் கேம் சேஞ்சர் படத்தை 7.5 மணி நேரம் எடுத்து வைத்து 3 மணி நேரமாக சுருக்கி எடிட் செய்த பின்னரும் 2 மணி நேரம் 45 நிமிடங்களுக்கு குறைக்கப்பட்ட நிலையில், படத்தின் சுவாரஸ்யம் ரொம்பவே அடி வாங்கி விட்டதாக பிரபல மலையாள எடிட்டர் ஷமீர் முகமது கடந்த வாரம் வெளியான நரிவேட்டை படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது ஷங்கர் பற்றி மோசமாக பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வெப்சீரிஸ் எடுக்கலாம்: இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தையும் அப்படி எடுத்து வைத்து தான் இந்தியன் 3 படமே உருவானது என்றும் ஆனால், இந்தியன் 2 ஓடாத நிலையில், இந்தியன் 3 படத்தை மேலும், செலவு செய்து வெளியிட லைகா நிறுவனமே விரும்பவில்லை என்றும் தயாரிப்பாளர்களின் பணத்தை தண்னீர் போல செலவு செய்கிறார் ஷங்கர். சரியான திட்டமிடல் இல்லாமல் அவர் நீளமாக எடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், இனிமேல் அவர் கேம் ஆஃப் த்ரோன்ஸ் போல வெப்சீரிஸை ஓடிடி நிறுவனங்களுக்காக எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்றும் ட்ரோல் செய்கின்றனர்.

Journalist Subair slams supports Director Shankar in Game Changer Editor Shameer Muhammed

சுபைர் காட்டம்: ஒரு தொழில்நுட்பக் கலைஞர் தனது வெற்றி மூலமே பதிலடி கொடுக்க வேண்டுமே தவிர, ஒரு பிரபல இயக்குநரை இப்படி தனது அடுத்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது இழிவுப்படுத்தும் வகையில் பேசுவது எல்லாம் சமீப காலமாக புரமோஷன் சர்ச்சைகளை கிளப்பும் டிரெண்டிங் மன நிலை என்று மூத்த பத்திரிகையாளர் சுபைர் சாடியுள்ளார். பல முன்னணி நடிகர்கள் படுதோல்வி படங்களை கொடுத்தாலும், தொடர்ந்து அவர்களது ரசிகர்கள் ஹீரோவுக்கு பக்க பலமாக உள்ளனர். அடுத்தடுத்து தயாரிப்பாளர்களும் அந்த ஹீரோவை நம்பி படமெடுக்க பணம் போடுகிறார். ஆனால், ஷங்கர் போன்ற இயக்குநர்களை இப்படி ஓரங்கட்டும் விதமாக பேசுவது தவறு என்றும் அவர் கூடிய விரைவிலேயே தனது கம்பேக்கை கச்சிதமாக கொடுப்பார் என்றும் சுபைர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X