தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் சேர இதுதான் காரணமா?.. ரஜினி செய்தது இதைத்தான்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்

சென்னை: தனுஷும் ஐஸ்வர்யாவும் இப்போது தங்களது திருமண உறவிலிருந்து பிரிந்திருக்கிறார்கள். அவர்கள் பிரிந்திருந்தாலும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. சமீபத்தில்கூட அவர்களது விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் தனுஷும் ஐஸ்வர்யாவும் ஆஜராகவில்லை. இதன் காரணமாக அவர்கள் இரண்டு பேரும் மீண்டும் சேரப்போகிறார்கள் என்று தகவல்கள் பரவ ஆரம்பித்து ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில் இவ்விவகாரம் தொடர்பாக பிரபல பத்திரிகையாளர் சுபைர் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு தனுஷுடன் காதல் திருமணம் நடந்தது. அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷும், ஐஸ்வர்யாவும் சுமூகமாக அவர்களது திருமண வாழ்க்கையை நகர்த்தினர். முக்கியமாக ஐஸ்வர்யாவின் இயக்குநராகும் ஆசையை உணர்ந்துகொண்டு அவர் இயக்கத்தில் ஹீரோவாக நடித்தார் தனுஷ். அதேபோல் தனுஷின் பல வளர்ச்சிக்கு ஐஸ்வர்யா முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.

dhanush aishwarya rajinikanth

பிரிவு: இந்தச் சூழலில் சில வருடங்களுக்கு முன்பு இருவரும் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். அதில், தாங்கள் இருவரும் தனித்தனி வழிகளில் பயணப்படப்போகிறோம் என்று அறிவித்து அதிர்ச்சியை கொடுத்தனர். அதற்கு பிறகு பேசிய தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, 'எல்லோர் வீட்டிலும் நடப்பதுபோன்றுதான் இங்கும் நடந்தது. அவர்களை இணைத்து வைக்க பெரியவர்கள் முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்' என்று கூறினார். இதனால் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

விவாகரத்து மனு: அதனையடுத்து இருவீட்டு தரப்பிலிருந்தும் தொடர்ந்து இரண்டு பேருக்கும் சமரச பேச்சுவார்த்தையை நடத்தினார்கள். ஆனால் இருவருமே ஆரம்பத்தில் விடாப்பிடியாக இருந்ததாக தெரிகிறது. மேலும் விவாகரத்து மனுவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், இனி தனுஷும், ஐஸ்வர்யாவும் சேர்வதற்கு வாய்ப்பே இல்லை என்பதைத்தான் அவர்கள் தங்கள் செயல் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள் என்று கூற ஆரம்பித்தார்கள்.

ட்விஸ்ட்: ஆனால் யாரும் எதிர்பார்க்காதபடி இப்போது ஒரு ட்விஸ்ட் நடந்திருக்கிறது. அதாவது விவாகரத்து மனு விசாரணைக்கு வந்தபோது இரண்டு பேருமே கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதற்கிடையே ஐஸ்வர்யாவின் இன்ஸ்டா போஸ்ட்டுக்கு லைக்கிட்டார் தனுஷ். மேலும் வேட்டையன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியின்போது தனுஷ் பார்த்த திரையரங்கில் ஐஸ்வர்யாவும் இருந்தார். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது அவர்கள் மீண்டும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக பலரும் பேச ஆரம்பித்தார்கள்.

சுபைர் பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான சுபைர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. முதலில் அவர்களை சேர்த்து வைக்க இரு குடும்பத்தினரும் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதனால்தான் விவாகரத்து மனுவை தாக்கல் செய்தார்கள். ஆனால் இப்போது இரண்டு பேரின் மனநிலையிலும் மாற்றங்கள் வந்திருக்கின்றன. மகன்கள் பெரும்பாலும் தனுஷுடன் இருக்கிறார்கள்.

ரஜினிக்கு நிம்மதி தேவை: இவர்கள் இருவரும் இணைவதற்கு மகன்களும் முக்கியமான காரணமாக இருக்கலாம். முக்கியமாக ரஜினிக்கு இப்போது நிம்மதி தேவை. ஏற்கனவே சௌந்தர்யாவுக்கு நடந்த ஒரு திருமண பிரச்னை அவரை படுத்தியது. இப்போது சௌந்தர்யா விஷயத்தில் நிம்மதியாக இருக்கிறார். ஐஸ்வர்யா விஷயத்தில் கொஞ்சம் நிம்மதி இழந்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் பலமுறை இரண்டு பேரிடமும் பேசிவிட்டதாக சொல்கிறார்கள். எனவே அவரது நிம்மதிக்காக கூட ஐஸ்வர்யா மனம் மாறியிருக்கலாம். அதேபோல் தனுஷும் இப்போது நிறைய பயணப்படுகிறார். அந்தப் பயணமும் தனுஷின் மனதை மாற்றியிருக்கலாம். இருவரும் இணைவது பற்றியான அறிவிப்பு விரைவில் வரலாம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X