சீரியலில் பெருகும் கள்ளத்தொடர்பு கதை.. இளைஞர்கள் சீரழிகிறார்கள்.. விளாசிய தமிழா தமிழா பாண்டியன்!
சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் மகன் போதைப் பொருள் வழக்கில் கைதாகி இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் இது பேசுபொருளாகி உள்ளது. இதுகுறித்து பேசிய தமிழா தமிழா பாண்டியன், கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு உலகத்தில் இருக்கும் அத்தனை போதை வாஸ்துகளும் மலிவாக கிடைக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக காவல்துறை கடமை தவறியதுதான் என்றார்.
போதைப்பொருளை ஒழிப்பதில் இந்திய அரசு அதிக போதைப்பொருளை செலுத்தி வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு போதைப் பொருள் கடத்தலை தடுக்க தீவிரம் காட்டி வருகிறது. இதனால் ஆங்காங்கே போதை பொருள் கடத்தல் கும்பலையும் கைது செய்து இருக்கிறது. இதில், மகன் அலிகான் துக்ளக் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழா தமிழா பாண்டியன்: இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசிய தமிழா தமிழா பாண்டியன், போதைப் பொருள் வழக்கில் மன்சூர் அலிகானின் மகன் கைது செய்யப்பட்டதால் தான் இந்த வழக்கு பரபரப்பாக பேசப்படுகிறது. மூன்று மாதத்திற்கு முன் முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத் அவர்களின் மகன் போதை வழக்கில் கைது செய்யப்பட்டார். இதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் தமிழ்நாடு முழுக்க கடை சரக்காக கஞ்சா மலிந்து கிடக்கிறது. அதற்கு வெட்கப்பட வேண்டியது காவல்துறை தான் மாணவர்கள் இல்லை.மது, கஞ்சா, அபின் என உலகத்தில் இருக்கும் அத்தனை போதை வாஸ்துகளும் கல்லூரி மாணவர்களுக்கு எளிதாக கிடைக்கிறது.
கலாச்சார சீர்கேடு: இதுபோன்ற போதைப்பொருளுக்கு அடிமையாகும் மாணவர்கள் சனி மற்றம் ஞாயிறு கிழமைகளில் ஈசிஆரில் விலை உயர்ந்த கார், அல்லது பைக்கை எடுத்துக் கொண்டு, சுற்றுலா செல்கிறார்கள். இதனால் பெரும்பாலான பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். பணத்தை கொட்டி பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு, கல்லூரியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இது போன்ற கலாச்சார சீரழிவுக்கு முக்கிய காரணம் சினிமா மற்றும் சீரியல் தான். முன்பெல்லாம் சினிமாவில் கள்ளத்தொடர்பு மற்றும் கஞ்சா தொடர்பான படங்கள் ஒன்று இரண்டு வந்து கொண்டிருந்தன.
கள்ளத்தொடர்பு கதை: ஆனால், இப்போது தினந்தேறும் நாம் பார்க்கும் சீரியல்களில் கள்ள தொடர்பு கதை தான் அதிகம் வருகிறது அடுத்தவன் மனைவியை தடவுவதையே கதையாக காட்டி வருகின்றனர். இதுவே இன்றைய இளைஞர்களின் சீரழிவுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. இப்படி சீரழியும் சமுதாயத்தில் பெரியாரை, காமராஜரை எங்கு போய் தேடுவது.இவை அத்தனைக்கும் காரணம் காவல் துறை தான். காவல் துறை தனது கடமையை செய்ய தவறிவிட்டதால், இன்று மன்சூர் அலிகான் போல பல பெற்றோர்கள் புலம்பிக்கொண்டு இருக்கின்றனர்.
நேர்மையான அதிகாரி: இவை அனைத்துக்கும் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது, அரசாக்கம் நினைத்தால் அனைத்தையும் செய்து விடும். ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி பொன் மணிக்கவேல் போன்ற நேர்மையான போலீஸ் அதிகாரியை இந்த வழக்கில் நியமித்தால், அவர் 24 மணி நேரத்தில் அனைத்தும் கண்டுபிடித்து விடுவார். அடுத்து தமிழ்நாட்டில் கஞ்சா விற்கும் அனைவரும் ஆந்திராவிற்கு தப்பி சென்று விடுவார்கள் என்று தமிழா தமிழா பாண்டியன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











