நெப்போலியன் மகன் திருமணத்தில் ரகசிய டீல்.. ஜப்பானில் கல்யாணத்தை வைத்த சூட்சமம்..பிரபலம் சொன்ன தகவல்!
சென்னை: நடிகர் நெப்போலியன் மூத்த மகன் தனுஷுக்கும், அக்ஷயா என்கிற பெண்ணுக்கும் நவம்பர் 7ந் தேதி ஜப்பானில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ராதிகா, சரத்குமார், இவர்களின் மகன் ராகுல், குஷ்பு, மீனா, கார்த்தி, பாண்டியராஜன் கலா மாஸ்டர் என அனைவருமே கலந்து கொண்டனர். இவர்களின் திருமண வீடியோ இணையத்தில் வைரலானது.
அதில், தனுஷ் அக்ஷயா கழுத்தில் தாலி கட்டியதும்,நெப்போலியன் தேம்பி தேம்பி அழுதார். அவர் மட்டுமில்லாமல் அனைவரும் அந்த நேரத்தில் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினர். தற்போது,சோஷியல் மீடியா, ஊடகம் என எந்த பக்கம் சென்றாலும் ஜப்பானை திக்குமுக்காட வைத்த இவர்களின் திருமணம் பற்றி தான் பேச்சு இருந்து வருகிறது.

தமிழா தமிழா பாண்டியன்: இவர்களின் திருமணம் குறித்து King 24X7 என்ற சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி அளித்துள்ளார். அதில், நெப்போலியன் மகனுக்கு தசை சிதைவு ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக அங்கே செல்கிறார். பின் மகன் தனுஷூக்கு அந்த இடம் வசதியாக இருந்ததால், ஐடி தொழில், பண்ணை வீடு என அங்கேயே செட்டிலாகிவிட்டார். இப்போது, தனக்கு பிறகு மகனை யார் கவனித்துக்கொள்வார் என்கிற கவலை வருகிறது. இதனால்,அவரை கவனித்துக் கொள்ள ஒரு தாதி தேவை, ஆனால், அந்த தாதி நன்றாக கவனித்துக்கொள்வார் என்று சொல்ல முடியாது.
அக்ஷயாவிற்கு வரும் ரூ500 கோடி சொத்து: தற்போது நெப்போலியனுக்கு ஆயிரம் கோடியில் சொத்து இருக்கிறது. அதில் தனுஷ் மற்றும் அவரது சகோதரருக்கும் சொத்தை சரியாக பிரித்தால் ரூ 500 கோடி சொத்து வரும். இதனால், அவரை பராமரிக்கும் தாதி எதை வேண்டுமானாலும் செய்வார் என்கிற பயம் நெப்போலியனுக்கு இருக்கிறது. இதனால், பராமரிக்கும் தாதியை மனைவியாக்கி விட்டால், அவருக்குத்தான் அந்த சொத்து வரப்போகிறது. இதனால் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில் தான் திருமணம் நடந்தது.
பெண்ணின் விருப்பத்துடன்: இந்த திருமணத்தை அந்த பெண் அக்ஷயா அவரது பெற்றோர் என அனைவரின் மனப்பூர்வமான சம்மதத்துடன் தான் நடந்துள்ளது. அந்த மணப்பெண் அக்ஷயா, தனது இளமையை, ஆயுள், அறிவு, ஆசை என அத்தனையையும் தனுஷூக்காக அர்பணிக்கிறாள். இது அந்த பெண்ணே விரும்பி, உடன்பட்டு ஏற்றுக்கொண்ட திருமணம் தான். நெப்போலியன் அமெரிக்கா போனதே மகனுக்காகத்தான், இதனால் மகன் இருக்கும் வரை சந்தோஷமாக இருக்கட்டும் என்று நினைத்துத்தான் ஜப்பானே வியந்து போகும் அளவிற்கு திருமணத்தை நடத்தி உள்ளார் நெப்போலியன்.
ஜப்பானில் திருமணத்தை நடந்த காரணம்: ஆனால், இவர்களின் திருமணத்தை அமெரிக்க சட்டம் அனுமதிக்கவில்லை, அதாவது அமெரிக்க சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் இரண்டு பேருமே, இல்லறவாழ்க்கையில் ஈடுபட தகுதியானவர்களாக இருக்க வேண்டும், அதாவது உடல் தகுதி இருக்க வேண்டும். அப்படி தகுதி இல்லாதவர்களின் திருமணத்தை அமெரிக்க சட்டம் அனுமதிக்காது என்பதால் தான் ஜப்பானில் திருமணம் நடைபெற்றது. ஜப்பானில் அமெரிக்கா போன்று எந்த சட்டமும் இல்லை யார் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் அமெரிக்கா, ஜப்பான் நேசநாடுகள் என்பதால், ஜப்பானில் நடந்த திருமணத்தை அமெரிக்கா அங்கீகரிக்கும் என்பதால் தனுஷின் திருமணம் ஜப்பானில் நடத்தப்பட்டது.


Click it and Unblock the Notifications











