வேதனையில் இருக்கும்போது கொண்டாடுவார்.. யூட்யூபர் இர்ஃபானை வெளுத்த பத்திரிகையாளர்
சென்னை: யூட்யூபில் பிரபலமான சேனல் இர்ஃபான்ஸ் வியூ. உணவுகளை விமர்சனம் செய்யும் இவரது சேனலுக்கு என்று பல சப்ஸ்க்ரைபர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள், விஜய் சேதுபதி, நெப்போலியன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களுடன் இணைந்தும் இவர் வீடியோ போட்டிருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவர் குறித்து பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியா சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
உலகம் தற்போது ஸ்மார்ட் ஃபோனுக்குள் அடங்கியிருக்கிறது. அனைத்து தளங்களிலும் டிஜிட்டல் வந்துவிட்டதால் பலரும் அதனை பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமானவைகளை செய்துவருகின்றனர். அதில் அதிகம் பேர் செய்வது யூட்யூப் சேனல் ஆரம்பிப்பது. பல யூட்யூப் சேனல்கள் இருந்தாலும் தனித்துவமிக்க யூட்யூப் சேனல்களே நிலைக்கின்றன. அப்படி ஒரு சேனல்தான் இர்ஃபான் வியூஸ். ஆரம்பத்தில் புகழின் உச்சிக்கு சென்ற அவர் இப்போது சர்ச்சைகளில் அடிக்கடி சிக்குகிறார்.

என்ன சர்ச்சை: ஒருமுறை விபத்து ஏற்படுத்திய அவர் கடைசியாக தனது மனைவியின் பிரசவத்தின்போது தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்டார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சூழலில் பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியா இர்ஃபான் குறித்து பேசியிருக்கிறார். தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இர்ஃபான் ஆளுங்கட்சியின் செல்லம். ஆளுங்கட்சிதான் அவர் செய்யும் தவறுக்கும் காரணம். ஒருமுறை பல்கலைக்கழகத்தில் சுத்திகரிப்பு செய்யும் மூதாட்டியை காரில் மோதினார். அவர் இறந்துவிட்டார். அதனை கவனித்தவர்கள் இர்ஃபானை துரத்தினார்கள். ஆனால் அவர் நிற்கவில்லை.
பணம் படைத்தவர்கள்: மூதாட்டிக்கு இர்ஃபான் இழப்பீடுகூட கொடுக்கவில்லை. நான் ஓட்டவில்லை எனது ட்ரைவர்தான் ஓட்டினார் என்று சொன்னார். எப்போதுமே பணம் படைத்தவர்கள் எல்லோரும் அப்படித்தான் சொல்வார்கள். இது பெரிய சர்ச்சையாக மாறிய பிறகு திமுகவில் ஒரு பெரிய பெண் தலைவரை பார்த்து கையை காட்டுகிறார். அவர்தான் இவருக்கு நெருக்கம். உடனே சம்பவம் நடக்காத மாதிரி இர்ஃபான் தப்பிவிட்டார். இது அவரது அரசியல் தொடர்புக்கு பின் உள்ள விஷயம்.
துபாயில் பார்த்தார்: அதனையடுத்து கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை துபாயில் சென்று பார்த்தார். அதை அவர் வீடியோவாகவும் போட்டார். இந்தியாவில் தடை செய்யப்பட்டாலும் அயல்நாட்டில் சென்று பார்த்தார். பெண்கள் பிறந்தால் கள்ளிப்பால் கொடுத்த சமூகமாக தமிழ் சமூகம் இருந்தது. இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை அறிய தடை விதிப்பதற்கு இதுபோன்றவைதான் காரணம். ஆனால் துபாய்க்கு சென்று இர்ஃபான் தனது குழந்தை ஆணா, பெண்ணா என்பதை பார்க்கிறார்.
மூன்று மணி நேரம்: பொதுவாக பெண்களுக்கு பிரசவ வேதனை மூன்று மணி நேரம் இருக்கும். ஒரு பெண் வேதனையில் இருக்கும்போது இர்ஃபானோ தொப்புள் கொடியை வெட்டிக் கொண்டாடுகிறார். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அதை தாண்டியும் சில வீடியோக்கள் வந்தன. அனஸ்தியா கொடுத்தது, அறுவை சிகிச்சை செய்ததையெல்லாம் வீடியோவாக எடுத்தார். அதை அனுமதித்த மருத்துவரை விசாரிக்க வேண்டும். ஆனால் மருத்துவ துறை உடனடியாக நடவடிக்கையே எடுக்கவில்லை. இவை எல்லாம் அவ்வளவு பெரிய தவறு. இரட்டை ஆயுள் தண்டனை தர வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











