நண்பர்களுடன் நைட் பார்ட்டி.. ஜெயம் ரவியின் கட்டுப்பாட்டில் ஆர்த்தி இல்லை.. கொளுத்திப்போட்ட பிரபலம்!

சென்னை: ஜெயம் ரவியும், அவரது மனைவி ஆர்த்தியும் விவாகரத்து செய்ய உள்ளதாக சில மாதங்களுக்கு முன்னரே தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், தன் மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார். இவரின் இந்த அறிவிப்பு திரைப்பிரபலங்கள் மட்டுமில்லாமல் அவரின் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நடிகர் ஜெயம் ரவி 2009 ஆம் ஆண்டு ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக தற்போது பிரிந்துள்ளனர். இது குறித்து அறிக்கை வெளியிட்ட ஜெயம் ரவி, நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைக்கு பின், மிகவும் நெஞ்சம் கசந்த இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.

jayam ravi aarthi ravi pandian

தமிழா தமிழா பாண்டியன்: இவர்களின் பிரிவு முடிவு சோஷியல் மீடியாவில் பேசுபொருளானதைத் தொடர்ந்து, பலரும் பல காரணத்தை கூறி வருகின்றனர். அந்த வகையில், தமிழா தமிழா பாண்டியன் இவர்களின் இந்த முடிவு குறித்து பேசி உள்ளார். அதில், ஜெயம் ரவியும் ஆர்த்தியும் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் வெகுவிமர்சையாக அனைவரும் பாராட்டும் வகையில் தான் நடந்தது. தற்போது இவர்களின் இந்த முடிவு கவலை அளிக்கிறது.

நைட் பார்ட்டி: தனுஷ், ஐஸ்வர்யா, ஜெயம் ரவி, ஆர்த்தி என சினிமாவில் அடுத்தடுத்து விவாகரத்துகள் நடந்து வருகிறது. இதற்கு காரணம், இவர்களிடம் மேட்டுக்குடி பழக்கம் இருக்கிறது. இவர்களிடம் பணம் கொட்டி கிடப்பதால், பொழுதுபோக்கே நைட் பார்ட்டியில் கலந்து கொள்வதாகி விட்டது. ஆர்த்தியின் அம்மா பெரிய தயாரிப்பாளர் அவர்களிடம் செல்வம் கொட்டி கிடக்கிறது. அதே போல ஜெயம் ரவியும் ஒரு சினிமா பிரபலத்தின் மகன் தான். அப்படி இருக்கும் போது, ஜெயம் ரவியும் நைட் பார்ட்டிக்கு செல்கிறார், அர்த்தியும் நைட் பார்ட்டிக்கு செல்கிறார். இதுதான் தனுஷ், ஐஸ்வர்யா வீட்டிலும் நடந்த பிரச்சனை.

ஈகோவால் விரிசல்: சாதாரண வீட்டு பெண்கள் பொழுது போகவில்லை என்றால், ஷாப்பிங் அல்லது கோவிலுக்கு செல்வார்கள். ஆனால், சினிமா பிரபலங்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல் , ஈசிஆரில் பண்ணை வீட்டில், நண்பர்கள், தோழிகளுடன் இரவு முழுவதும் ஆட்டம் போடுவார்கள். இதனால், வீட்டில் இருக்கும் குழந்தைகளை கவனித்துக்கொள்ள முடியாமல் போகும் இதைத்தொடர்ந்து நடக்கும் சண்டையால்,ஈகோ அதிகமாகி, கடைசியில் விரிசல் அதிகமாகி விடும். இதுதான் ஜெயம் ரவி,ஆர்த்தி விஷயத்தில் நடந்து இருக்கு, ஜெயம் ரவியின் கட்டுப்பாட்டில் ஆர்த்தி இல்லை.

குழந்தைகளின் எதிர்காலம்: பணம் இருக்கும் வீட்டில் இந்த பிரச்சனை இருக்கும், என் சுதந்திரத்தில் நீ தலையிடாதே, உன் சுதந்திரத்தில் நான் தலையிட மாட்டேன் என்று சென்று விடுகிறார்கள். இவர்கள் மூலமாக பிறந்த அந்த குழந்தைகளின் நிலைமை என்ன? குழந்தையின் எதிர்காலம் என்ன? இதைப்பற்றி இரண்டு பேருக்குமே கவலை இல்லை. உண்மையில் ஆர்த்தியும் ஜெயம் ரவியும் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து இருந்தால், பிரிந்து இருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களுக்கு தங்களின் சந்தோஷம் தான் முக்கியமாக உள்ளது என்று தமிழா தமிழா பாண்டியன் அந்த பேட்டியில் பேசி உள்ளார். இவரின் இந்த பேட்டியைப் பார்த்த இணையவாசிகள், யாரும் குழந்தையை விட்டு பிரிய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள் என்றும் வாய்ப்பு வந்தபடி பேசாதீர்கள் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகினற்னர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X