மம்மூட்டி, மோகன்லாலுக்கு போட்டி.. ஷகீலாவுக்கு இவ்ளோ பிரச்னை கொடுத்தார்களா?.. உமாபதி இப்படி சொல்றாரு?

சென்னை: நடிகை ஷகீலா மலையாள திரையுலகில் ரொம்பவே ஃபேமஸாக இருந்தவர். தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பது, சில யூட்யூப் சேனல்களுக்காக பேட்டி எடுப்பது என பிஸியாக இருக்கிறார். இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் ஷகீலா குறித்து பத்திரிகையாளர் உமாபதி சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ஷகீலா. 1995ஆம் ஆண்டு பிளே கேர்ள்ஸ் என்ற படத்தின் மூலம் தனது 16ஆவது வயதில் திரையுலகில் நுழைந்தார். ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா ஹீரோயினாக நடித்திருந்தார். அவருக்கு தங்கையாக ஷகீலா நடித்திருந்தார். அடல்ட் படமாக உருவாகியிருந்ததால் முதல் படத்திலிருந்தே அடல்ட் நடிகை என்ற முத்திரை ஷகீலா மேல் குத்தப்பட்டது.

shakeela mammootty mohan lal

பயந்த ஹீரோக்கள்: ஷகீலா நடித்த கின்னாரா தும்பிகள் என்ற படம் 100 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. அந்த சமயத்தில் ஒரு கவர்ச்சி நடிகையின் படம் எப்படி 100 நாள்கள் ஓடியது என்றுதான் ஆச்சரியப்பட்டார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி ஷகீலாவும் அதை நினைத்து ரொம்பவே ஆச்சரியம்தான் பட்டார். அதுமட்டுமின்றி ஷகீலாவுக்கு இருக்கும் க்ரேஸை பார்த்து மலையாளத்தின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரே கொஞ்சம் பயந்துபோனார்கள் என்ற பேச்சும் எழுந்தது உண்டு.

குக் வித் கோமாளி: ஷகீலா என்றாலே கவர்ச்சி நடிகை என்ற அடையாளம்தான் பலருக்கும் இருந்தது. ஆனால் அவர் விஜய் டிவியில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவருக்குள் இருக்கும் மிகச்சிறந்த மனிதியை அனைவருமே தெரிந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் அவர் சக போட்டியாளர்களால் அம்மா என்றே அழைக்கப்பட்டார். மேலும் ஷீத்தல் என்ற திருநங்கையையும் அவர் தத்து எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஒதுங்கிய ஷகீலா: ஷகீலா தனது வாழ்க்கையில் ஏகப்பட்ட காதல் தோல்விகளை சந்தித்தவர். அதனை அவரே சொல்லியும் இருக்கிறார். சமீபத்தில்கூட ஒரு தகவலின்படி அவர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் மீது சிறு வயதில் காதலில் இருந்ததாகவும் பேச்சு ஒன்று ஓடியது. காலங்கள் செல்ல செல்ல ஷகீலாவிற்கான பட வாய்ப்புகள் குறைந்தன. இதனையடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி அளித்துவருகிறார். அதுமட்டுமின்றி பேட்டிகளையும் எடுத்துவருகிறார்.

உமாபதி பேட்டி: இந்நிலையில் நடிகை ஷகீலா குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பத்திரிகையாளர் உமாபதி அளித்த பேட்டி ஒன்றில், “கேரளாவில் 1980களில் அந்த மாதிரியான படங்கள் எடுக்கும் கலாசாரம் வந்தது. தமிழ்நாட்டில் அப்படியெல்லாம் எடுக்க முடியாது. ஷகீலா மலையாளத்தில் அறிமுகமானார். கவர்ச்சி வேடங்களில் அவர் நடித்தாலும் நிர்வாணமாக அவர் நடித்ததே இல்லை. அந்த மாதிரியான படங்களை தயாரிக்கவும் செய்தார் ஷகீலா.

ஷகீலாவுக்கு வந்த பிரச்னை: மம்மூட்டிக்கெல்லாம் அப்போது ஐந்து லட்சம் ரூபாய் சம்பளம். அவரது படங்கள் 20 லட்சம் ரூபாய்வரை வசூல் செய்யும். ஷகீலா நடித்த படங்களோ இரண்டு லட்சம் ரூபாய் பட்ஜெட்டில்தான் உருவாகின. ஆனால் 20 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்தன. இதனால் அங்குள்ள ஹீரோக்கள் பயந்தது உண்மைதான். ஒருகட்டத்தில் ஆபாசமாக நடிக்கக்கூடாது என்று கேரள அரசும், திரையுலகும் சேர்ந்து ஷகீலாவை பேக் செய்து அனுப்பினார்கள். மீண்டும் கேரளா பக்கமே வரவேக்கூடாது என்றெல்லாம் கூறினார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X