2026ல் விஜய் நினைத்தது நடக்காது.. 500 கோடி சம்பளம் கேட்டு மீண்டும் சினிமாவுக்கு வருவார் -பிஸ்மி ஷாக்
சென்னை: நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான வேலைகளில் செம பிசியாக உள்ளார். இது ஒருபுறம் இருக்க, இவரது கடைசிப் படமான தளபதி 69 படத்திற்கான ப்ரீ புடெக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு உள்ளது. மாநாடு முடிந்த சில நாட்களில் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிக் கொள்ளலாம் என விஜய் தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றனர். இப்படியான நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் எப்படி இருக்கும் என பிரபல சினிமா பத்திரிகையாளர் வலைபேச்சு பிஸ்மி தெரிவித்துள்ள கருத்துகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் வசூல் மன்னன். ஹிராண்ட் ஓப்பனிங் உள்ள மாஸ் ஹீரோ, அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகர். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான கோட் படத்தில் இவரது சம்பளம் மட்டும் ரூபாய் 200 கோடிகள் என தயாரிப்பாளரே கூறினார். அதேபோல் கடைசி படமான தளபதி 69இல் இவரது சம்பளம் ரூபாய் 275 கோடிகள் என கூறப்பட்டது. இந்தச் சம்பளம் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் சம்பளத்தை விடவும் அதிகம் எனவும் கூறப்பட்டது.

இப்படியான நிலையில், தளபதி 69 படம் அறிவிக்கும்போதே படம் அடுத்த ஆண்டு அதாவது 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த தகவலைப் பார்த்த ரசிகர்கள் அக்டோபரில் தீபாவளி உட்பட மொத்தம் மூன்று விழாக்கள் வருகின்றது. இந்த மூன்று விழாக்களில் எதாவது ஒன்றில் படம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேசி வருகின்றனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் மூத்த பத்திரிகையாளர் வலைபேச்சு பிஸ்மி விஜய்யின் அரசியல் பயணம் எப்படி இருக்கும், அவர் மீண்டும் சினிமாவுக்கு வருவாரா என்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்களைப் பகிர்ந்துள்ளார்.
விஜய்: பிஸ்மி இது தொடர்பாக பேசுகையில், " நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். அவர் தற்போது அரசியல் களத்தில் களமிறங்கினாலும், 2026ஆம் ஆண்டு தேர்தல் என்பது அவர்கள் எதிர்பார்க்கின்ற முடிவுகளைக் கொடுக்காது. இப்போது வேண்டுமானால் அவருக்கு, தமிழ்நாடு மக்கள் நம்பக்கம் உள்ளனர். அவர்கள் நம்மை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைப்பார்கள் என நினைத்துக் கொண்டு இருக்கலாம். ஆனால் கள நிலவரம் அப்படி இல்லை.

500 கோடி சம்பளம்: 2026ஆம் ஆண்டு தேர்தலில் விஜய்யால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியவில்லை என்றால், அடுத்த தேர்தல் 2031இல்தான். அந்த தேர்தல் வரை விஜய் வீட்டில் சும்மா இருப்பாரா, அல்லது மருத்துவர் ராமதாஸ் போல தினமும் அறிக்கை விட்டுக்கொண்டு இருப்பாரா? எப்படியும் விஜய்க்கு சினிமாவில் தனது இடம் எப்பேர்ப்பட்டது எனத் தெரியும். தன்னை வைத்து படம் தயாரிக்க எத்தனை தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்றார்கள் எனத் தெரியும். இதனை விஜய் உணரும்போது கட்டாயம், சினிமாவில் மீண்டும் நடிக்க வருவார். அப்போது அவர் தனது சம்பளத்தை ரூபாய் 500 கோடிகள் எனக் கூறினாலும், அதனைக் கொடுப்பதற்கும் தயாரிப்பாளர்கள் தயாராகவே இருப்பார்கள் " என பிஸ்மி அந்த பேட்டியில் பேசியுள்ளார். பிஸ்மியின் இந்தப் பேச்சு விஜய் ரசிகர்களுக்கு ஒருபுறம் விஜய் மீண்டும் சினிமாவுக்கு வருவார் என்பது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், அரசியலில் எதிர்பார்த்த வெற்றியை எட்டமுடியாது என பேசியுள்ளது கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











