ஷங்கர் மாறவே இல்லை.. இந்தியன்2வை அவங்கதான் காப்பாத்தணும்.. பிரபலம் ஓபன் டாக்
சென்னை: கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் இந்தியன் 2 கடந்த 12ஆம் தேதி வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரசிகர்கள் படம் பார்க்க சென்றார்கள். ஆனால் அவர்களுக்கு நல்ல அனுபவத்துக்கு பதிலாக ஏமாற்றமே கிடைத்தது. படத்துக்கு பெரும்பாலும் நெகட்டிவ்வான விமர்சனங்களே கிடைக்கின்றன. சூழல் இப்படி இருக்க சினிமா பத்திரிகையாளர் அந்தணன் இந்தியன் 2 படம் பற்றியும், ஷங்கர் பற்றியும் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். ஊழல், லஞ்சத்துக்கு எதிராக வாள் சுழற்றப்பட்ட அந்தப் படம் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. முக்கியமாக கமல் ஹாசனின் நடிப்பு, மேக்கப், சுஜாதாவின் வசனம், ஷங்கரின் மேக்கிங், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என எல்லா ஏரியாவிலும் படம் சுழன்று அடித்ததன் காரணமாக மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. ஷங்கரின் கரியரில் தவிர்க்க முடியாத படமாகவும் அது இருக்கிறது.

இந்தியன் 2: அந்தப் படத்தின் முடிவிலேயே இரண்டாம் பாகத்துக்கான லீடோடு முடித்திருந்தார் ஷங்கர். ஆனால் கடந்த பல வருடங்களாக இந்தியன் 2 எடுக்கப்படவில்லை. ஒருவழியாக இந்தியன் 2 எடுக்கப்பட்டு கடந்த 12ஆம் தேதி வெளியானது. இதில் கமலுடன் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்; லைகா நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது.
பிரமாண்ட ரிலீஸ்: இந்தியன் படத்தின் முதல் பாகம் மெகா ஹிட் என்பதால் இரண்டாம் பாகத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. அந்த எதிர்பார்ப்போடு கடந்த 12ஆம் தேதி ரிலீஸான படத்தை ரசிகர்கள் பார்க்க சென்றனர். படத்தின் முதல் காட்சியிலிருந்தே இந்தியன் 2வுக்கு நெகட்டிவ்வான விமர்சனங்களே பெரும்பாலும் கிடைத்தன. பேசாமல் இந்தப் படத்தை எடுக்காமலேயே இருந்திருக்கலாம் என்று ஓபனாக பேச ஆரம்பித்தார்கள் ரசிகர்கள்.

20 நிமிடங்கள் கட்: அதிலும் ஷங்கர் இந்தப் படத்திலும் தனது வழக்கமான டெம்ப்ளேட்டைதான் பயன்படுத்தியிருக்கிறார். அனிருத்தின் இசை எல்லாம் ஒன்றுமே இல்லை. முக்கியமாக தொழில்நுட்பங்கள் பெரிதாக வளராத காலத்திலேயே கமல் ஹாசனுக்கு இந்தியனில் அருமையாக மேக்கப் போட்டிருந்தார்கள். இப்போது தொழில்நுட்பங்கள் வளர்ந்தும் கமலின் மேக்கப் சொதப்பிவிட்டது என்று ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. மேலும் படத்தின் நீளம் அதிகம் இருப்பதாக கூறியதை அடுத்து படத்திலிருந்து 20 நிமிடங்கள் தூக்கப்பட்டிருக்கின்றன.
அந்தணன் பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் இந்தியன் 2 குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'இந்தியன் படம் க்ளாசிக்கான படம். அதன் கனெக்ட்டிவிட்டியை எடுக்கிறோம் என்று இந்தியன்2வை எடுத்திருக்கிறார்கள். ஷங்கர் இன்னும் மாறவே இல்லை என்பது இந்தப் படத்தை பார்க்கும்போது புரிகிறது. ஊழல், லஞ்சத்துக்கு எதிராக வழக்கம்போல் பேசியிருக்கிறார்.
இந்தியன் 3க்காகத்தான் இந்தியன் 2வையே எடுத்திருக்கிறார்கள். சொல்லப்போனால் இப்போது நாம் பார்க்கும் முழு படமுமே இந்தியன் 2 படத்தின் முதல் பாதிதான். படத்தின் மூன்றாவது பாகத்துக்காக இதை நீட்டியிருக்கிறார்கள். எடிட் செய்யப்பட வேண்டிய காட்சிகளை எல்லாம் இந்தப் படத்தில் சொருகியிருக்கிறார்கள். இனிமேல் அந்த ஃபேமிலி ஆடியன்ஸ்தான் இந்தியன் 2 படத்தை காப்பாற்ற வேண்டும்'"என்றார்.


Click it and Unblock the Notifications











