Ajith - அறுவை சிகிச்சையா?.. நார்மல் செக்கப்பா?.. அஜித்துக்கு என்னாச்சு?..நெருக்கமானவர் கூறும் விஷயம்

சென்னை: நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்து முடிந்தது. இதனையடுத்து ரெஸ்ட்டில் இருந்த அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்; அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் ஒன்று பரபரத்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் பத்திரிகையாளரும், அஜித்திடம் நெருங்கி பழகியவருமான வி.கே.சுந்தர் இந்த விவகாரம் குறித்து பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்துடன் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார் அஜித்குமார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வருடம் மே மாதம் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதோடு வேறு எந்த அப்டேட்டையும் கொடுக்காமல் இருக்கிறது படக்குழு. இதனால் ஏகே ரசிகர்கள் ரொம்பவே வருத்தப்பட்டுக்கொண்டனர்.

Journalist VK Sundar Post About Ajith Health Issue Controversy

அஜர்பைஜானில் ஷூட்டிங்: முறையான அப்டேட்டுகள் எதுவும் வராவிட்டாலும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கியது. இதில் அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. அப்டேட்டுகள் வரவில்லை என்றாலும் ஷூட்டிங்காவது தொடங்கிவிட்டதே என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர் ரசிகர்கள். ஒருவழியாக ஷூட்டிங்கின் முதல் ஷெட்யூலும் முடிந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.

அடுத்தக்கட்ட ஷூட்டிங்: சில மாதங்களுக்கு முன்பு அந்த அறிவிப்பு வெளியானது. ஆனால் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. அநேகமாக அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்கும் என்று கூறப்பட்டது. அதேசமயம் லைகா நிறுவனம் இப்போது கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் விடாமுயற்சி ஷூட்டிங்கை தள்ளி வைக்க திட்டமிட்டிருப்பதாக ஒரு பேச்சு ஓடியது. இதனால் அஜித் ரசிகர்கள் சோர்வடைந்தனர்.

அறுவை சிகிச்சை: நிலைமை இப்படி இருக்க திடீரென நேற்று ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அதாவது அஜித் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்; அங்கு அவரது உடலை முழு பரிசோதனை செய்ததில் மூளை கட்டி இருப்பது தெரிய வந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அந்தத் தகவல் தெரிவித்தது. இதனால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பரபரத்தது. அஜித்துக்கு மூளையில் கட்டியா என்று அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட அதிர்ச்சியில் உறைந்தனர்.

முறையான அறிவிப்பு இல்லை: அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் ஏகேவுக்கு என்னதான் ஆச்சு என்று சமூக வலைதளங்களில் அலைபாய தொடங்கினார்கள். ஆனால் அஜித் தரப்பிலிருந்து முறையான எந்த அறிவிப்பும் வரவில்லை. ஒருதரப்பினர் அவருக்கு அறுவை சிகிச்சை என்று சொல்ல; மறுதரப்பினரோ இல்லை சாதாரண செக்கப்பிற்காகத்தான் சென்றார் என்று கூறினர்.

வி.கே.சுந்தர் பதிவு: இந்நிலையில் பத்திரிகையாளரும், அஜித்துடன் நெருங்கி பழகியவருமான வி.கே.சுந்தர் இந்த விவகாரம் குறித்து புதிய பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அவரது தனது முகநூல் பக்கத்தில், "தல அஜித்குமார் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் தகவலில் உண்மையில்லை. வழக்கமான செக்கப்தான். வீட்டுக்கு வந்துவிட்டார்"" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வி.கே.சுந்தரின் இந்தப் பதிவு ஏகே ரசிகர்களை நிம்மதியடைய வைத்தாலும்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவதில் என்ன பிரச்னை இருக்கிறது என்று அஜித் தரப்புக்கு ஒரு சிலர் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள். அக்கறை வைத்திருக்கும் ரசிகர்களின் குழப்பத்தையும், கவலையையும் தீர்க்காமல் ஏகே தரப்பு இவ்வளவு அசட்டையாக நடந்துகொள்ளக்கூடாது என்று கண்டனங்களும் வலுக்க தொடங்கியிருக்கன்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X