இரண்டாம் திருமணத்திற்கு தயாரா? அப்பாவின் கட்டுப்பாட்டில் பிரசாந்த்..பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: 90 காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணனாக இருந்தவர் நடிகர் பிரசாந்த். விஜய், அஜித் தமிழ் சினிமாவில் தனது தடத்தை பதிக்க தடுமாறிக் கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ் சினிமாவை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார். சில ஆண்டுகளாக சினிமாவில் காணாமல் போன பிரசாந்த், கோட் படத்தில் நடித்து வருகிறார். இவர் பல விஷயத்தை பிரபல பத்திரிக்கையாளர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகர் தியாகராஜனின் மகனான பிரசாந்த், அரும்பு மீசை இளைஞனாக 1990ம் ஆண்டு இயக்குநர் ராதா பாரதி இயக்கத்தில் வெளியான வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் தனது சினிமாவில் அடியெடுத்து வைத்தார் பிரசாந்த். இப்படத்தில் காவேரி, சுலக்சனா, சங்கீதா, கே. பிரபாகரன், ஜனகராஜ், சார்லி, கே.ஆர். விஜயா, சின்னி ஜெயந்த், குமரிமுத்து, கொச்சின் ஹனிபா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் தியேட்டரில் பல நாட்கள் ஓடி வணிக ரீதியாக வசூலை அள்ளியது.

journalist Zubair talks about actor prashanth second marriage

விவாகரத்து: இதைத் தொடர்ந்து சினிமா கெரியரில் கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன், வண்ண வண்ண பூக்கள், செம்பருத்தி, வின்னர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த பிரசாந்த், 2005 ஆம் ஆண்டு கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அடிக்கடி கோர்ட் கேஸ் என அலைந்துக் கொண்டிருந்த பிரசாந்தால் சினிமா மீது கவனம் செலுத்த முடியாமல் போனதை அடுத்து அப்போது வெளியான படங்கள் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.

கோட் படத்தில்: இதையடுத்து, இடைவெளிக்கு பின்னர் பொன்னர் சங்கர் படத்தின் நடித்தார். ஆனால், அதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. தற்போது அந்தகன் படத்தில் நடித்துள்ளார். இந்தியில் வெளியாகி சக்கைப்போடு போட்ட அந்தாதூண் என்ற படத்தின் ரீமேக் தான் இந்த அந்தகன் படம். படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில் படம் இன்னும் வெளியாகவில்லை. தற்போது விஜய் நடிக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

திறமையான நடிகர்: இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான, சுபைர் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், நடிகர் பிரசாந்த், வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் சினிமானில் சிறு வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். முதல் படமே ஹிட் என்பதால் அனைத்து முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் அவர் நடித்திருந்தார். இவரின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு காரணமே அவருடைய அப்பா தியாகராஜன் தான், பிரசாந்த் ஹீரோவாக வரவேண்டும் என்று நினைத்ததுமே, டான்ஸ், பைட் என அனைதிலும் அவரை திறமையானவாக மாற்றினார். இன்றைய நாள் வரைக்கும் அப்பாவின் பேச்சை தட்டாத பிள்ளையாகத்தான் இருக்கிறார். அவர்கள் இருவருக்குள்ளும் அப்படி ஒரு பாண்டிங் இருக்கு.

இரண்டாம் திருமணம்: பிரசாந்தின் திருமணவாழ்க்கை சரியாக அமையவில்லை என்ற வருத்தம் தியாகராஜனுக்கு இருக்கு. பெற்றோர் பார்த்துவைத்த திருமணம் தான். கல்யாணம் ஆனபிறகு சில விஷயங்கள் தெரியவர, முறைப்படி நீதிமன்றம் சென்று, விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது பிரசாந்த், தனியாகத்தான் இருக்கிறார். அவருக்கு வயசு இருப்பதால், நிச்சயம் இரண்டாம் திருமணம் செய்து கொள்வார். அவருக்கு என்று ஒரு குடும்பம் நிச்சயம் வேண்டும் என்று அந்த பேட்டியில் பத்திரிக்கையாளர் சுபைர் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X