அடிப்படை அறிவே வனிதா விஜயகுமார் மகளுக்கு இல்லையா?.. கணக்குல இவ்ளோ வீக்கா.. கலாய்க்கும் ஃபேன்ஸ்!
சென்னை: வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா விஜயகுமார் பிக் பாஸ் போட்டியாளராக இந்த சீசனில் பங்கேற்றுள்ள நிலையில், ஆரம்பத்தில் அவருக்கு சப்போர்ட் பண்ண ரசிகர்களே தற்போது அவரை திமிரு புடிச்சவ என ட்ரோல் செய்து வருகின்றனர்.
மேலும், அடிப்படை கல்வி எந்தளவுக்கு அவசியம் என்பது ஜோவிகாவின் நடத்தையை பார்த்தாலே தெரிகிறது என்றும் அடிப்படை அறிவு கூட இல்லாமல் சாதாரண கணக்கு கூட தெரியாத மக்காக இருக்காரே என பிக் பாஸ் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

வனிதா விஜயகுமாரின் மறு உருவம் என்றும் அந்த ஜக்கம்மாவே மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருக்கா என ஏகப்பட்ட மீம்களும் குவிந்து வருகின்றன.
இளம் போட்டியாளர்: சமீபத்தில் 18 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய ஜோவிகா விஜயகுமார் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தொடர்ந்து ப்ரோமோ வில் இடம் பெற்று வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரையில் நல்லவனாக இருக்கிறாயா அல்லது கெட்டவனாக இருக்கிறாயா என்பதெல்லாம் முக்கியமல்ல ப்ரோமோவில் நீ இருக்கிறாயா என்பதுதான் முக்கியம் என்பதை புரிந்து கொண்டு இந்த சீசன் போட்டியாளர்கள் குறிப்பாக ஜோவிகா இந்த கேமை விளையாடி வருகிறார்.
மரியாதை தெரியவில்லை: வயது வித்தியாசம் இல்லாமல் பிரதீப் ஆண்டனியை, விசித்ரா உள்ளிட்டோரை ஒருமையில் பேசி வரும் ஜோவிகா கத்தி சண்டை போட்டால் டைட்டிலை வென்று விடலாம் என வனிதா டியூன் செய்து அனுப்பினாரா என்னவோ தெரியவில்லை . ஒவ்வொரு வாரமும் சண்டக்கோழி ஆகவே மாறியுள்ளார்.
எட்டாம் கிளாஸ் ஃபெயில்: மாணவர்கள் கல்வி கற்க இலவசக் கல்வி, மதிய உணவு, காலை உணவு, என் அரசு ஒரு பக்கம் ஏகப்பட்ட திட்டங்களைப் போட்டு படிக்க வைத்து வரும் நிலையில், புடிச்சா படி.. இல்லைனா நடி என்கிற ரேஞ்சுக்கு ஜோவிகா கடந்த வாரம் பேசியது விவாத பொருளாகவே மாறியது.
கணக்கே தெரியல: ஜோவிகா ஃபயராக பேசிய நிலையில், அவரது பேச்சை பலரும் ஆதரித்து வந்த நிலையில், தற்போது அநாகரிகமாக ஜோவிகா பேசி வருவதை பார்த்து எரிச்சல் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், ஜோவிகாவுக்கு அடிப்படை கணக்கே தெரியவில்லை என்பதை வெளிக்காட்டும் வீடியோ ஒன்று தீயாக பரவி வருகிறது. 400 x 4 எவ்வளவு என கணக்கு போடும் இடத்தில் 800 என விஜய் வர்மா சொல்ல, ஆமாம் என ஜோவிகா கணக்கு போடுவதை பார்த்து ரசிகர்கள் பிரதீப் ஆண்டனியை விட பயங்கரமாக சிரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











