விசித்ராவை வச்சு விளாசிய வனிதா மகள்.. 24 மணி நேர பிக்பாஸையே பார்க்க வச்சிடுவாங்க போல!..
சென்னை: Bigg Boss Tamil 7: Jovika vs Vichitra - கடந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் சைலன்ட் மோடில் இருந்த நிலையில், ஒரு மணி நேர நிகழ்ச்சியை பார்க்கவே போர் அடித்தது. ஆனால், இந்த முறை அனைத்து போட்டியாளர்களும் அட்டென்ஷன் சீக்கிங்கிற்காக தொடர்ந்து ஓபனா பேசி வருகின்றனர்.
அதற்காகவே 24 மணி நேர ஷோவை பார்க்கலாம் போல தோன்றுகிறது. அதிலும், இன்று நடந்த விசித்ரா vs ஜோவிகா சண்டை தான் செம ஹைலைட். வெள்ளிக்கிழமை என்பதால் பெரிய சண்டையை வழக்கம் போல பிளான் பண்ணி சேர்த்து கமலுக்கு நாளை செம தீனி போட்டுள்ளனர் என்கிற விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.

வெள்ளிக்கிழமை ஃபயர் மோடு சண்டை விஜய் வர்மாவுக்கும் பிரதீப் ஆண்டனிக்கும் நடக்கும் என்று பார்த்தால் ஜோவிகா சும்மா விசித்ராவை கிழித்து தொங்கவிட்ட நேரடி காட்சிகள் ரசிகர்களை அதிர வைத்துள்ளன.
அனன்யா ராவ் டாட்டூ: அனன்யா ராவ் இடுப்புக்கு கீழ் குத்தியிருக்கும் டாட்டூ பற்றி அறிந்த வில்லங்க விசித்ரா அதை பார்க்க வேண்டும் என கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் கேட்க, அதற்காக தனது பேன்ட்டை கழட்டி காட்டினேன் என பப்ளிக்காக அனன்யா ராவ் பேசியதும் பஞ்சாயத்து பற்றிக் கொண்டது. அதை தொடர்ந்து ஜோவிகா பாதியில் படிப்பை நிறுத்தியதை சீண்டும் விதமாக விசித்ரா பூமர் அட்வைஸ் கொடுக்க என் அம்மா சொன்னாலே கேட்க மாட்டேன், நீயாரு எனக்கு அட்வைஸ் பண்றதுக்குன்னு திடீரென பாம்பாக மாறி படமெடுத்து விட்டார் ஜோவிகா.
மானம் போச்சு மரியாதை போச்சு: அம்மா ஸ்தானத்தில் அட்வைஸ் பண்றேன்னு தேவையில்லாமல் வனிதா பொண்ணு கிட்ட வாய் கொடுத்த விசித்ராவுக்கு நீயெல்லாம் என்னை பத்தி பேசாத விச்சு என நீ வா போ என்கிற அளவுக்கு விளாசி எடுத்து விட்டார் ஜோவிகா.
தற்கொலை கான்செப்ட்: விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலையை வைத்து இப்படியொரு ஸ்க்ரிப்ட்டை விஜய் டிவி செய்துள்ளதா? ஏற்கனவே லயோலா கல்லூரியில் தற்கொலைக்கு எதிராக கமல் பேசியது போல சனி, ஞாயிறு ஜோவிகாவுக்கு சப்போர்ட் பண்ணி விசித்ராவை வறுத்தெடுக்க போகிறாரா கமல் என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.
விசித்ராவுக்கு ஆதரவு: இந்த காலத்து 2கே கிட்ஸ் எல்லாத்துக்கும் எமோஷனல் ஆகி விடுகின்றனர். பெரியவர் சிறியவர் என்கிற மரியாதையே தெரியவில்லை. 12ம் வகுப்பு படிக்க முடியவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலை எங்கே இருந்து வருகிறது. பேசிக் கல்வி இருந்தால் தான் பெரியவர்களை மதிக்க வேண்டும் என்பதாவது தெரியும், வனிதா மகளுக்கு அது கொஞ்சமும் தெரியவில்லை என நெட்டிசன்கள் விசித்ராவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
அடுத்த வாரம் பலி ஆடு: பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் இதுவரை யோகேந்திரனா? அனன்யா ராவா? யார் வெளியேற போகிறார் என்கிற விளிம்பு நிலை போட்டி நடைபெற்று வருகிறது. ஆனால், அடுத்த வாரம் விசித்ரா தான் கன்ஃபார்ம் பலி ஆடு என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். என்ன ஆகுதுன்னு வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











