10 வயசுல போலீஸ்காரனோட சண்டை போட்டிருக்கேன்.. மும்பையில பாட்ஷாவா இருந்திருக்கேன்.. ஜோவிகா அலப்பறை!
சென்னை: கமல்ஹாசன் வார இறுதியில் வந்து சமாதானம் செய்ய முயற்சித்தாலும், ஜோவிகாவும் விசித்ராவும் சண்டையை முடித்துக் கொள்ளாமல் இதே பஞ்சாயத்தை இந்த சீசன் முழுவதும் ஓட்டுவார்களா? என்கிற கேள்வி தான் எழுந்துள்ளது.
ஜோவிகாவை போலத்தான் நானும் 8வதுக்கு மேல் படிக்கவில்லை என கமல் அவருக்கு ஆதரவாக பேசினாலும், விசித்ரா கேரளாவில் இருந்து வந்த நிலையில், அந்த மாநிலமே கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த மாநிலம் என அவருக்கும் முட்டுக் கொடுத்திருந்தார்.

ஆனால், கமல் என்ன சமாதானம் சொன்னாலும், மரியாதைக்குறைவாக ஜோவிகா பேசியதை ஏற்க முடியாத விசித்ரா இனிமேல் தன்னை விச்சு என பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என்றும் மேடம் என்று தான் சொல்ல வேண்டும் என ஆர்டர் போட மீண்டும் இருவருக்கு இடையே விளம்பர இடைவேளையில் பற்றிக் கொண்டது.
அரம்பமே அடிதடி: வீடு ரெண்டான சண்டை ரெண்டாகும்னு அவசியம் இல்லை சந்தோஷமும் ரெண்டாகும்னு ஒரு பேச்சுக்காக சொன்னாலும், முதல் நாளில் இருந்தே வீட்டை ரெண்டாக்கி சண்டையை இந்த சீசனில் நல்லாவே மூட்டி வருகிறார் நம்ம நாரதர் பிக் பாஸ். ஆரம்பமே விஷ்ணு, விஜய் வர்மா, பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ், மாயா, விசித்ரா, ஜோவிகா, அனன்யா ராவ் என பலரும் வெளிப்படையாக சண்டை செய்வதற்கு என்றே ஓபனாகி இருப்பது ரசிகர்களுக்கு குதூகலத்தை கொடுத்துள்ளது.
கடந்த சீசன் போல கன்டென்ட் கொடுக்காமல் கடுப்பேற்றியது போல இல்லாமல், நல்லா அடிச்சிக்கோங்க இதுவும் நவயுக கிளேடியேட்டர் தானே என பிக் பாஸ் ரசிகர்கள் பார்த்து மகிழ்கின்றனர்.
10 வயசுல போலீஸ்காரனோட சண்டை: வனிதாவின் மகள் என்றால் சும்மாவா என விசித்ராவை வயது வித்தியாசம் கூட பார்க்காமல் கிழித்து தொங்கவிட்டதை ரசிகர்கள் பாராட்டி வரும் நிலையில், 10 வயசுல போலீஸ்காரனோடயே சண்டை போட்டு இருக்கேன் என பகீர் கிளப்பி உள்ளார் ஜோவிகா.
மும்பையில் தனியா இருந்தேன்: 16 வயதில் தனியாக மும்பையில் தங்கியிருந்தேன் என்றும் வாழ்க்கையில் அத்தனை கஷ்டங்களையும் அனுபவித்து தான் இந்த இடத்தில் வந்திருக்கேன் என ஜோவிகா பேசியதை கேட்ட ரசிகர்கள் மும்பையில் ஒருவேளை பாட்ஷாவா இருந்திருப்பாரோ ஜோவிகா என கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











