ஐட்டம் பாட்டில் கிளாமர் ஆட்டம் போடும் ஜோவிகா விஜயகுமார்.. இன்ஸ்டாகிராம் ரிலீஸ் ஆன குட்டி வீடியோ!

சென்னை: ஜோவிகா விஜயகுமார், நடிகை வனிதா விஜயகுமாரின் மகள். இவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 7இல் போட்டியாளராக களமிறங்கி பலரது கவனத்தை ஈர்த்தவர். அதன் பின்னர் இயக்குநர் பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். மேலும் தான் பிக் பாஸில் பங்கேற்று சம்பாதித்த பணத்தைக் கொண்டு மிஸ்டர் அண்ட் மிசர்ஸ் என்ற படத்தை தயாரிக்கவும் செய்தார். இந்த படத்தின் கதை, திரைக்கதை அமைத்து நடித்து இயக்கி இருந்தார், இவரது அம்மா வனிதா விஜயகுமார்.

இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தோல்விப் படமாக மாறியது. இது மட்டும் இல்லாமல், இளையராஜாவிடம் முறையான அனுமதி பெறாமல் அவரது பாடலை படத்தில் பயன்படுத்தியதற்காக இளையராஜா தரப்பில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. ஜோவிகா விஜயகுமார் எப்போது சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆவார் என்ற கேள்வி பலருக்கும் இருந்து கொண்டு இருந்த நிலையில், தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

Jovika Vijaykumar Shares Her Dance Video For Vediaya Podu Promo Song Cameo

அதாவது ஜோவிகா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்கள் மற்றும் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் ஒரு பாடலில் நடனம் ஆடுகிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. இது மட்டும் இல்லாமல், நடன இயக்குநர் பாபா பாஸ்கர் மாஸ்டர் இவருக்கு நடனம் சொல்லிக் கொடுக்கும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அதாவது, இது மட்டும் இல்லாமல், படப்பிடிப்புத் தளத்தில் தான் எடுத்துக் கொண்ட மற்றொரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

கிளாமர் டான்ஸ்: ஜோவிகா விஜயகுமார் தனது இந்த போஸ்ட்க்கு, " வெடிய போடு புரோமோ பாடலில் தான் ஒரு கேமியோ நடனம் செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது மட்டும் இல்லாமல், நடன இயக்குநர் பாபா பாஸ்கர் மாஸ்டருக்கு நன்றி என்றும், மொத்த குழுவினருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார். இவரது இந்த போஸ்ட்டை பார்த்த ரசிகர்களும் இணையவாசிகளும் ஜோவிகாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

கேமியோ: மேலும் சிலர் ஒரு படத்தில் நடிகையாக களமிறங்குவீர்கள் என்று பார்த்தால், ஐட்டம் பாடலில் கேமியோ டான்சராக களமிறங்குகிறீர்களே என்று கேட்டு வருகிறார்கள். மேலும் சிலரோ, கேமியோ என்பதே ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காகத்தான், அப்படி இருக்கையில் அந்த சர்ப்ரைஸை இப்படி இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் போட்டு உடைத்து விட்டீர்களே என்றும் கேட்டு வருகிறார்கள்.

Jovika Vijaykumar Shares Her Dance Video For Vediaya Podu Promo Song Cameo

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X