மல்லிகைப்பூ, புடவை, கிராமத்து லுக்... ஜோவிகாவின் புதிய லுக்.. ஹீரோயினாக புதிய இன்னிங்ஸ்

சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகியாக அடுத்த கட்ட பயணத்தை தொடங்கியுள்ள ஜோவிகா விஜயகுமார், தனது புதிய பட அறிவிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இயக்குநர் ஆர். தணராஜ் சாரதி இயக்கத்தில் உருவாகி வரும் 'பூ காய் கனி' திரைப்படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ள ஜோவிகாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கிராமத்து இளம் பெண் தோற்றத்தில் வெளியான இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

அதாவது, நடிகர் விஜயகுமாரின் பேத்தியும், நடிகை வனிதா விஜயகுமாரின் மகளுமான ஜோவிகா, சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பிறகு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கத் தயாராகி வந்த அவர், தற்போது 'பூ காய் கனி' திரைப்படத்தின் மூலம் தனது அடுத்த முக்கியமான பயணத்தை தொடங்கியுள்ளார்.

இப்படி இருக்கையில், படக்குழு வெளியிட்டுள்ள அறிமுக போஸ்டரில், மரத்தின் பின்னால் நின்றபடி எளிமையான புடவையில், நெற்றியில் பொட்டு, தலையில் மல்லிகைப்பூ அணிந்த கிராமத்து இளம் பெண் தோற்றத்தில் ஜோவிகா காட்சியளிக்கிறார். பின்னணியில் வயல்வெளி, புளியமரம், மாலை நேர வானம் போன்ற இயற்கை காட்சிகள் இடம்பெற்றிருப்பது, படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகியிருப்பதை உணர்த்துகிறது.

Jovika Vijaykumar s Poo Kaai Kani First Look Out Rural Avatar Wins Hearts Ahead of Her New Journey

மேலும், போஸ்டரில் "ஒரு புதிய ஆரம்பத்தின் கதை" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் குடும்ப உறவுகள், கிராமத்து வாழ்க்கை, இயற்கையோடு இணைந்த மனிதர்களின் உணர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதைக்களமாக படம் உருவாகியிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தை இயக்குநர் ஆர். தணராஜ் சாரதி இயக்குகிறார். பல்லத்தூர் சந்தானம் தயாரிக்கும் இப்படத்திற்கு பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். இசையை வேத் சங்கர் அமைக்க, படத்தொகுப்பை வி.ஜே. சாபு ஜோசப் கவனிக்கிறார். கலை இயக்குநராக பி. செல்வகணபதி, சண்டைக் காட்சிகளை அன்பறிவு வடிவமைக்கின்றனர். நடன அமைப்பை தினேஷ், ஆடை வடிவமைப்பை பூர்ணிமா ராமசாமி மேற்கொள்கிறார்கள். இந்தப் படம் பாட்டு கம்பெனி நிறுவனத்தின் சார்பில் தயாராகி வருகிறது.

மற்றொருபுறம், ஜோவிகாவின் இந்த புதிய தோற்றத்திற்கு ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. "கிராமத்து பெண் கதாபாத்திரத்திற்கு ஜோவிகா மிகவும் பொருத்தமாக இருக்கிறார்", "முதல் பார்வையிலேயே படத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டுவிட்டது", "வித்தியாசமான கதையை தேர்வு செய்திருக்கிறார் போல" என்றெல்லாம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எது எப்படியோ... ஜோவிகாவை முற்றிலும் புதிய பரிமாணத்தில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள 'பூ காய் கனி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை கணிசமாக உயர்த்தியுள்ளது. குறிப்பாக, கிராமத்து மண்வாசனையுடன் உருவாகியிருக்கும் இந்த படம், ஜோவிகாவின் சினிமா பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமையுமா என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X