உருகி உருகி காதலிச்சேன்.. ஆப்பு வச்சிட்டு போயிட்டாரு.. மேடையில் கண்கலங்கிய ஜாய் கிரிஸில்டா!

சென்னை: நடிகரும், சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றியதாக புகார் அளித்து இருந்தார். இதை மாதம்பட்டி ரங்கராஜ் மறுத்ததோடு,
அது என் குழந்தை என்பதை நிரூபிக்க வேண்டும் என கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட DNA டெஸ்டில் மாதம்பட்டி தான் ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு தந்தை என்பது உறுதியானது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜாய் கிரிஸில்டா திடீரென கண்கலங்கி உருக்கமான பேசினார்.

ஜாய் கிரிஸில்டா: தொகுப்பாளினி சிவசங்கரில் நடத்திய பெண்கள் நிகழ்ச்சியில் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி இறந்து 7 ஆண்டுகள் ஆன போதும், அந்த பெண்ணை மறக்காமல் அந்த காதல் மனைவியை நினைத்து வாழ்த்து கொண்டு இருக்கும் ஒருவருக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய ஜாய் கிரிஸில்டா. அப்போது, காரில் வரும் போது சிவகங்கரியிடம் பெண்கள் தினத்தில் எதற்கான ஆணுக்கு எவிருது தரவேண்டும் என்று கேட்டேன். அவர் உங்களை பற்றி சொன்னார். உடனே உங்களின் இன்ஸ்டாகிராமை பார்த்தேன் பார்த்ததுமே என்னால் அழுகையை கட்டுப்படத்த முடியவில்லை. அதன் பின், இவருக்கு விருதை நான் தான் தருவேன் என்று சொன்னேன். இப்படிப்பட்ட மனிதரை காணுவது மிகவும் அரிது. நாம் உயிருக்கு உயிராக நேசித்தவர்கள் நம் வாழ்க்கையில் இல்லை என்றாலும், அவரின் நினைவுகளோடு வாழ்ந்து வருவது மிகப்பெரிய விஷயம் அதுவும் இந்த காலத்தில் இப்படிப்பட்ட ஒருவரை பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

Madhampatty Rangaraj Joy Chrizildaa
Photo Credit:

கண்ணீர்: இவர் நினைத்து இருந்தால், மீண்டும் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை தொடங்கி இருக்கலாம். ஆனால், இன்னும் அவர் மனைவியின் நினைவுகளை மறக்காமல் அவர்களுடன் வாழ்ந்து வருகிறார். நான் ஒருவரை உருகி உருகி காதலித்தேன்... ஆனால், அவர் எனக்கு ஆப்பு வைத்துவிட்டு போய்விட்டார். ஆனால், இவர் அன்பின் உதாரணமாக இருக்கிறீர் என மேடையிலேயே ஜாய் கிரிஸில்டா கண்ணீருடன் பேசினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், பலரும் அவருக்கு ஆறுதலை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X