ஜாய் கிரிசல்ட்டா மகனைப் பாருங்க... மாதம்பட்டி ரங்கராஜ் மாதிரியே மகன் இருக்கான்னு குதூகலம்

சென்னை: ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து ஏமாற்றி விட்டார் என்று அளித்த புகார் அடுத்தடுத்த கட்ட விசாரணையை நோக்கி நகர்ந்து கொண்டு உள்ளது. இதில் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்படவுள்ளது. அப்படி இருக்கையில் ஜாய் கிரிசல்ட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்து அப்படியே மாதம்பட்டி ரங்கராஜ் மாதிரியேதான் இருக்கிறார் என்று பகிர்ந்துள்ளார். அவரது இந்த போஸ்ட்க்கு ரசிகர்கள் பலரும் ஹார்ட் இமோஜிகளை பறக்கவிட்டு வருகிறார்கள்.

நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார் என்றும், எனது குழந்தைக்கு அவர் தான் அப்பா என்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் ஜாய் கிரிசல்ட்டா. ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தகப்பன். மேலும் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டது பலருக்கும் ஷாக் கொடுத்தது.

Joy Crizilda Shares Son s Photo Says He Looks Exactly Like Madampatti Rangaraj Amid DNA Test Order

இவர்களின் திருமணப் புகைப்படங்களை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்த ஜாய் கிரிசல்ட்டா மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்த பின்னர், நெருங்கிப் பழகும் போது மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பிய பர்சனல் வீடியோக்களையும் பகிர்ந்து மேலும் ஷாக் கொடுத்தார்.

வாக்கு வாதம்: ஒரு கட்டம் வரை ஜாய் கிரிசல்ட்டா தன்னை மிரட்டித்தான் திருமணம் செய்து கொள்ள வைத்தார் என்று தெரிவித்த மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசல்ட்டா பகிர்ந்த வீடியோக்களுக்குப் பிறகு, அதுபோன்ற ஸ்டேட்மெண்ட்களை வெளிவிடவில்லை. மாறாக ஜாய் கிரிசல்ட்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு நான் தான் அப்பா என்றால் அந்த குழந்தையின் பராமரிப்புச் செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அறிக்கை விட்டார்.

Joy Crizilda Shares Son s Photo Says He Looks Exactly Like Madampatti Rangaraj Amid DNA Test Order

டி.என்.ஏ.: இந்நிலையில் தான் மாதம்பட்டி ரங்கராஜ்க்கு ஆதரவாக அவரது முதல் மனைவி ஸ்ருதி கருத்துக்களை வெளியிட்டு வந்தார். கடந்த சில மாதங்களாக இவர்களின் விவகாரம் தொடர்பாக எந்த அப்டேட்டும் இல்லாத நிலையில், கடந்த வாரத்தில் நீதிமன்றம் டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க உத்தரவு பிறப்பித்தது. டி.என்.ஏ சாம்பிள்களை இருவரும் மத்தியஸ்தம் செய்யும் வழக்கறிஞரிடம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

மகன் புகைப்படம்: இப்படி இருக்கையில் தனது மகன் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, மாதம்பட்டி ராஹா ரங்கராஜ். மகன் அப்படியே அவனது அப்பா மாதம்பட்டி ரங்கராஜின் ஜெராக்ஸ். மேலும் அவனின் தாத்தா மாதம்பட்டி தங்கவேலுவைப் போலவும் இருக்கிறான் என்று மிகவும் மகிழ்ச்சியாகவும் குதூகலமாகவும் பகிர்ந்துள்ளார். அவரது இந்த போஸ்ட்டுக்கு இணையவாசிகள் பலரும் ஹார்டின் எமோஜிகளை பறக்க விட்டு வருகிறார்கள். மேலும் பலர் குழந்தை நன்றாக இருக்க வாழ்த்து தெரிவித்தும் வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X