பணம் பத்தும் செய்யும்.. மாதம்பட்டி ரங்கராஜ் பின்னாடி வேலை செய்யறாரு..ஜாய் கிரிசல்ட்டா அட்டாக்!
சென்னை: நடிகர் மற்றும் சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசல்ட்டா விவகாரம் ஊர் அறிந்தது தான் என்றாலும் இவர்களுக்கு இடையிலான பிரச்னைக்கு எப்போதுதான் ஒரு முடிவு வரும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல்துறை ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில் முன் வைக்கப்படுகிறது. இப்படி இருக்கும்போது, மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து தனது சமூக வலைதளங்களில் ஜாய் கிரிசல்ட்டா தொடர்ந்து பதிவிட்டே வருகிறார். இந்நிலையில் அவரது சமீபத்திய பதிவில் உங்கள் பணம் பத்தும் செய்யும் என்று எனக்குத் தெரியும் என்று பதிவிட்டுள்ளார்.
அக்டோபர் மாதத்தின் இறுதியில் ஜாய் கிரிசல்ட்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அப்பா மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்று கர்ப்பமாக இருக்கும் காலத்தில் இருந்தே தெரிவித்து வந்தார். குழந்தை பிறந்த பின்னர், அந்த குழந்தைக்கு அப்பா நான் என்றால், அந்த குழந்தைக்கான முழுப்பொறுப்பையும் நான் ஏற்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டார் மாதம்பட்டி ரங்கராஜ்.

டி.என்.ஏ சோதனை: மாதம்பட்டி ரங்கராஜ் இவ்வாறு அறிக்கை வெளியிட்டதும், விசாரணையின் போது டி.என்.ஏ டெஸ்ட் தேவையில்லை, அந்த குழந்தைக்கு அப்பா நான் தான் என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்திருந்ததாகவும், ஜாய் கிரிசல்ட்டா தெரிவித்திருந்தார். மேலும் இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை, மாதம்பட்டி ரங்கராஜை கண்டா வரச்சொல்லுங்க, டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இப்படி இருக்கும்போது, தற்போது அவர் பதிவிட்டுள்ள பதிவில் மாதம்பட்டி ரங்கராஜை கடுமையாக அட்டாக் செய்துள்ளார்.
அட்டாக்: அதாவது, " மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தைதனமான செயல்களில் ஈடுபடுகிறார். எனது தொலைபேசி எண்ணை தெரியாதவர்களிடம் பகிர்ந்து, மெசேஜ் அனுப்ப சொல்லுகிறார். மாதம்பட்டி ரங்கராஜ் இதுபோன்ற குழந்தைத்தனமான செயல்களில் ஈடுபடுவார் என நான் நினைக்கவில்லை, என்னை எல்லா வகையிலும் மாதம்பட்டி ரங்கராஜ் தாக்க முயல்கிறார். மாதம்பட்டி ரங்கராஜ் வைத்திருக்கும் பணம் பத்தும் செய்யும்" என்றும், " என்னை வீழ்த்துவதற்கு ஒரு கூட்டணியே வைத்து வேலை செய்து வருகிறார் எனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ்" என்றும் பதிவிட்டுள்ளார்.
உத்தரவு: இதனை ஜாய் கிரிசல்ட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், மாதம்பட்டி ரங்கராஜ் ஏன் இன்னும் டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு மாதிரிகளைக் கொடுக்காமல் இருக்கிறார் என்ற கேள்வியையும் பலர் எழுப்பி வருகிறார்கள். மாதம்பட்டி ரஙகராஜ் மீது ஜாய் கிரிசல்ட்டா அளித்த புகாரில் அவரை, வரும் டிசம்பர் 12ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி, சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











