விவாகரத்தான பெண்களை டார்கெட் செய்து ஏமாற்றும் மாதம்பட்டி ரங்கராஜ்.. பகீர் கிளப்பிய ஜாய் கிரிசல்ட்டா!

சென்னை: நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே இரண்டாவது திருமணம் செய்து, இரண்டு ஆண்டுகள் குடும்பம் நடத்தி இப்போது அது பெரும் பிரச்னையாக மாறி நிற்கிறது. அதாவது, முதல் மனைவி வழக்கறிஞராக இருக்கும் ஸ்ருதி பிரியா. அதேபோல் இரண்டாவது மனைவி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்ட்டா.

அவர்கள் பிரச்னை ஊர் அறிந்த பிரச்னை என்றாலும், ஜாய் கிரிசல்ட்டாவுக்கு குழந்தை பிறந்த பின்னர் இவர்கள் பிரச்னை மேலும் பூதாகரமாக மாறி உள்ளது. இந்நிலையில் ஜாய் கிரிசல்ட்டா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ள கருத்துக்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " நான் பலமுறை ஸ்ருதிக்கு போன் செய்துள்ளேன். அவர் எடுத்ததில்லை. மெசேஜ் செய்துள்ளேன். அவர் என்னிடத்தில் விளக்கிச் சொல்லி இருந்தால் இன்றைக்கு இப்படி ஒரு சூழலே வந்திருக்காது. இப்போது இருபுறமும் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வளவும் தெரிந்து கொண்டு, நீங்கள் எப்படி ரங்காஜ்க்கு ஆதரவாக இருப்பேன், அவரை இறுதி வரை காப்பாற்றுவேன் என்று கூறுகிறீர்கள். அவர் உங்களையும் ஏமாற்றி உள்ளார். என்னையும் ஏமாற்றி உள்ளார். இருவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இப்போது நீங்கள் உண்மையின் பக்கம் பேசி இருந்தால் பரவாயில்லை. இருவரையும் ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ்க்கு ஆதரவாக பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்.

Joy Crizildaa Accusing Madhampatty Rangaraj Targets Divorce Ladies For His Needs

விவாகரத்தான பெண்கள் : மாதம்பட்டி ரங்கராஜ்க்கு எதிராக நான் பேசத்தொடங்கிய பின்னர் என்னை பல பெண்கள் தொடர்பு கொண்டு தங்களையும் இவர் ஏமாற்றிவிட்டதாக என்னிடத்தில் கூறினர். என்னிடத்தில் அவ்வாறு கூறியவர்கள் அனைவரும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்கள். மாதம்பட்டி ரங்கராஜ் இதை ஒரு வாடிக்கையாக செய்து வருகிறாரோ என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது. என்னிடத்தில் பல பெண்கள் பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் குடும்பத்தில் அவரைக் கண்டித்திருந்தால் இப்படியொரு நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்காது. அவர்கள் வீட்டில் அவரது நடவடிக்கைகள் குறித்து எந்த கேள்வியும் கேட்பதில்லை போல, அதனால் தான் அவர் பல பெண்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்.

எது சரி?: இப்போது ஸ்ருதி பார்க்க வேண்டியது எது சரி என்பதைத்தான். ஆனால் அவர் மாதம்பட்டி ரங்கராஜை இறுதி வரை காப்பாற்றுவேன் என்று சொல்வதால் இது அவரது செயலை ஊக்குவிப்பதை போன்றது. இது தவறானது. மாதம்பட்டி ரங்கராஜ் அவ்வப்போது என்னிடத்தில் பொய் சொல்லி மாட்டிக் கொள்வார். அப்போது எல்லாம் எனது காலில் விழுந்தும், கட்டிப் பிடித்தும் அழுது புரண்டு சமாதானப்படுத்துவார். நான் மெசேஜ் அனுப்பியதாக ஸ்ருதி பகிர்ந்துள்ள வாட்ஸ் ஆப் சாட்கள் எல்லாம் அவர் சொல்ல சொல்ல நான் டைப் செய்து ஸ்ருதிக்கு அனுப்பியவை. இந்த கான்வர்சேஷன் நடக்கும்போது மாதம்பட்டி ரங்கராஜ் என்னுடன் தான் இருக்கிறார்.

பதில் எதிர்பார்ப்பு: நான் மாதம்பட்டி ரங்கராஜின் கோயமுத்தூர் வீட்டிற்குச் சென்றுள்ளேன். அவரது அம்மா எனது தாலிக்கு குங்குமம் வைத்து என்னை வாழ்த்தினார். இப்போது தான் அவரது மகன் நிம்மதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். எங்கள் திருமணம் நடைபெற்ற பின்னர், மாதம்பட்டி ரங்கராஜ் என்னிடத்தில் சொன்ன வார்த்தைகள், ஸ்ருதிக்கு நாம் திருமணம் செய்து கொண்டது தெரியும். இதில் அவருக்கு ஓ.கே. தான் என்றும் தெரிவித்தார். தொழில் ரீதியாக அவர் எங்காவது சென்றால் கூட என்னை அவரது மனைவி என்றுதான் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்" என்று பேசியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஜாய் கிரிசல்ட்டாவின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X