ஜாய் கிரிசில்டாவின் குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜா? டி.என்.ஏ ரிசல்ட் என்ன?
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து இரண்டு ஆண்டுகள் தன்னுடன் வாழ்த்துவிட்டு, தான் கருவுற்ற நிலையில், தன்னை விட்டு சென்றுவிட்டதாக ஜாய் கிரிசில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட டி.என்.ஏ டெஸ்டின் ரிசல்ட் தற்போது வெளியாகி உள்ளது.
ஜாய் கிரிசில்டா புகார்: ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தாமதமானதால், மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார. அவர் கொடுத்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பியது.
டிஎன்ஏ பரிசோதனை: அதில், மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிறிஸ்டில்லாவை திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக்கொண்டதாகவும், குழந்தை தன்னுடையது தான் என ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளிவந்தன. இதை மறுத்த மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டா என்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். நான் அவரை திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை, குழந்தைக்கு DNA test எடுக்க வேண்டும் என கூறி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

மாதம்பட்டி ரங்கராஜ்: இதைத்தொடர்ந்து, டி.என்.ஏ.டெஸ்டுக்கு நான் தயாராக இருக்கிறேன் என ஜாய் தொடர்ந்து கூறிவந்த நிலையில், மார்ச் 5ந் தேதி மாதம்பட்டி ரங்கராஜ், டி.என்.ஏ. பரிசோதனை செய்ய அனுமதி அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்துர, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது.
டிஎன்.ஏ டெஸ்ட் ரிசல்ட்: டி.என்.ஏ. பரிசோதனை முடிவின் அடிப்படையில் ஒரு அறிக்கையை தயார் செய்து மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா இடையே மத்தியஸ்தம் செய்ய நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி பி.என். பிரகாஷிடம் அளிக்குமாறு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி உத்தரவிட்டு இருந்தார். இந்த வழக்கு மார்ச் 30ந் தேதியான இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என மரபணு பரிசோதனையில் உறுதியாகி இருப்பதாக நீதிபதி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











