மகன் பிறந்ததும் ஜாய் கிரிஸில்டா கைக்கு வந்த அதிர்ஷ்டம்.. மேடம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்காங்க
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு ஜாய் கிரிஸில்டா புகார் அளித்ததிலிருந்து இந்த விவகாரம் கோலிவுட்டின் ஹெட்லைன்ஸ்களில் ஒன்றாக மாறியது. பிரச்னை இன்னும் ஓயாத சூழலில் அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்துவிட்டது. குழந்தைக்கு ராகா ரங்கராஜ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவின் இன்ஸ்டா போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கும், சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அந்தக் காதலை இரண்டு பேரும் திருமணம்வரை கொண்டு சென்றார்கள். இரண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணம்தான். முதல் கணவர் ஃபெட்ரிக்கிடமிருந்து ஜாய் விவாகரத்து பெற்றுவிட்டார்; ஆனால் மாதம்பட்டி ரங்கராஜோ தனது முதல் மனைவி ஸ்ருதியிடமிருந்து டைவர்ஸ் வாங்காமலே ஜாய்க்கு கணவரானார்.
புகார் அளித்த ஜாய் கிரிஸில்டா: ரகசியமாக இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. ஆனால் ஜாயிடமிருந்து மாதம்பட்டி விலக ஆரம்பித்ததாக தெரிகிறது. அதன் காரணமாக கொதிப்படைந்த ஜாய்; சில மாதங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரங்கராஜ் மீது புகார் அளித்தார். அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருவழியாக இந்த வழக்கில் விசாரணைக்கும் தனது முதல் மனைவியுடன் ஆஜரானார் மாதம்பட்டியார். இது ஒருபக்கம் இருக்க ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

டி.என்.ஏ பரிசோதனை: அந்த விசாரணை முடிந்த பிறகு அறிக்கை வெளியிட்டிருந்த ரங்கராஜ், தன்னை மிரட்டி திருமணத்துக்கு ஜாய் கிரிஸில்டா ஒத்துக்கொள்ள வைத்துவிட்டதாகவும்; டி.என்.ஏ டெஸ்ட் செய்து அது தன்னுடைய குழந்தைதான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனா அந்தப் பரிசோதனையை கேட்டவரே இன்றுவரை டெஸ்ட்டுக்கு வரவில்லை. அவரை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என பல வகையில் கிறிஸில்டா எடுக்கும் முயற்சிகள் ஒன்றும் ஒர்க் அவுட் ஆகவில்லை.
மீண்டும் புகார்: சூழல் இப்படி இருக்க ஜாய் கிரிஸில்டா மீண்டும் சில நாட்களுக்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல் துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், "என்னை ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாமீனில் வர முடியாதபடி வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தற்போது குடியிருக்கும் வீட்டுக்கான ஒப்பந்தம் 2026 பிப்ரவரியுடன் முடிவடைகிறது. அதுமட்டுமின்றி என்னுடைய இரண்டு குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள பணம் தேவைப்படுவதால் விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
விருது பெற்ற ஜாய் கிரிஸில்டா: இது ஒருபக்கம் இருக்க நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார் ஜாய். இந்நிலையில் அவருக்கு விருது ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது. அந்த விருதை ஏந்தியபடி புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் அவர், "ஒரு பெண்ணின் தைரியம் தான் அவளோட அடையாளம்" என்று குறிப்பிட்டு; தனக்கு ஆதரவாக இருக்கும் பலருக்கும் நன்றியும் தெரிவித்திருக்கிறார். இப்போது இந்தப் புகைப்படம் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











