முதல்வர் விஜயின் பிறந்தநாள்.. தவெகவில் இணைந்த ஜாய் கிரிஸில்டா என்ன செய்தார் தெரியுமா?
சென்னை: தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது தமிழக முதல்வர் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தவெக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், கொண்டாட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், அண்மையில் தவெகவில் இணைந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, அனாதை இல்லக் குழந்தைகளுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து விஜய்யின் பிறந்தநாளை நெகிழ்ச்சியாகக் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல சமையல் கலை நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது கடந்த ஆண்டு ஜாய் கிரிஸில்டா மகளிர் ஆணையத்தில் அளித்த பரபரப்புப் புகார் கொடுத்து இருந்தார். தன்னைத் திருமணம் செய்து, தான் கர்ப்பமான நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஜாய் குற்றம் சாட்டினார். ஆனால், அவர்தான் என்னை மிரட்டித் திருமணம் செய்து கொண்டார் என ரங்கராஜ் மறுப்பு தெரிவித்தார்.

டிஎன்ஏ டெஸ்ட்: கடந்த ஆண்டு ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ராகா ரங்கராஜ் என பெயர் வைத்துள்ளார். இந்தச் சூழலில், அது என் குழந்தையாக இருந்து, டிஎன்ஏ சோதனையில் அது உறுதியானால், ஒரு தந்தையாக அதற்குரிய கடமைகளைச் செய்வேன் என மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருந்தார். அதன்படி நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில், ஜாயின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என்பது சட்டப்பூர்வமாக உறுதியானது. இருப்பினும், அரசியலில் பலம் வாய்ந்தவராக இருந்த மாதம்பட்டி ரங்கராஜ் மீது அன்றைய திமுக அரசு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தனது புகார்கள் கண்டுகொள்ளப்படாமல் கைவிடப்பட்டதாகவும் ஜாய் கிரிஸில்டா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜாய் கிரிஸில்டா அண்மையில் முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்: இந்நிலையில், நாளை தவெக தலைவர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, அனாதை இல்லத்திற்கு ஜாய் கிரிஸில்டா நேரில் சென்றார். அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்குப் புத்தாடைகள், நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருட்களை வழங்கினார். அப்போது அங்குள்ள குட்டீஸ்கள், நாங்கள் விஜய் அண்ணாவை நேரில் பார்க்க வேண்டும் என்று ஜாயிடம் கேட்டனர். இதைக் கேட்டு நெகிழ்ந்துபோன ஜாய் கிரிஸில்டா, நிச்சயமாக உங்களை நாங்கள் விஜய் அண்ணாவிடம் அழைத்துச் செல்கிறோம் என்றனர். மேலும், குழந்தைகள் உங்களை நேரில் பார்க்க வேண்டும் என மிகவும் ஆசைப்படுகிறார்கள். இவர்களின் கோரிக்கையை ஏற்று நீங்கள் இவர்களைச் சந்திக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications