தைரியம் இருந்தால் DNA டெஸ்ட்க்கு வாங்க மாதம்பட்டி ரங்கராஜ்.. விடாமல் விரட்டும் ஜாய் கிரிசல்ட்டா!

சென்னை: நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்ட்டா பஞ்சாயத்து நாளுக்கு நாள் சூடு பிடித்துக் கொண்டே இருக்கிறது. இப்படி இருக்கும்போது, ஜாய் கிரிசல்ட்டாவுக்கு சில வாரங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அப்பா மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்று அவர் கர்ப்பமாக இருக்கும் போது இருந்தே சொல்லி வருகிறார். இப்படி இருக்கும்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜுடன் தான் எடுத்துக் கொண்ட நெருக்கமான புகைப்படத்தை பகிர்ந்து, தைரியம் இருந்தால் DNA டெஸ்ட்க்கு வாங்க மாதம்பட்டி ரங்கராஜ் என்று சவால் விட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

தனக்கு குழந்தை பிறந்ததும், சமூக வலைதளத்தில் டி.என்.ஏ டெஸ்ட்டே தேவையில்லை குழந்தை அப்படியே அப்பா மாதம்பட்டி ரங்கராஜைப் போலத்தான் இருக்கிறது என்று பதிவிட்டார். இதற்கு மாதம்பட்டி ரங்கராஜோ, நான் காவல்துறை விசாரணையின் போது கூட டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு சம்மதம் தெரிவித்தேன். அதற்கு எப்போதும் நான் தயார் தான் என்று பதிவிட்டிருந்தார். இதற்கு ஜாய் கிரிசல்ட்டாவோ, மாதம்பட்டி ரங்கராஜ் காவல்துறை விசாரணையில் என்னவெல்லாம் சொன்னார் என்பன சிலவற்றை வீடியோவாக வெளியிட்டு பட்டியலிட்டார்.

அதாவது, மாதம்பட்டி ரங்கராஜ் காவல்துறை விசாரணையின் போது DNA டெஸ்ட் வேண்டாம் என்று கூறியதாகவும், ஜாய் உடன் தான் இருந்தபோதுதான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், ஜாய் தான் தன்னை மிகவும் மகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டதாகவும் கூறியதாக கூறினார். இவரது இந்த வீடியோ பலரையும் திடுக்கிடச் செய்தது.

தனிப்பட்ட வீடியோ & புகைப்படம்: இது மட்டும் இல்லாமல், ஜாய் கிரிசல்ட்டா அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய சில தனிப்பட்ட வீடியோக்களையும், மாதம்பட்டி ரங்கராஜ் உடன் தான் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். ஒரு வீடியோவில் மாதம்பட்டி ரங்கராஜ் எக்கசக்க ஐ லவ் யூக்களையும், எக்கச்சக்க மிஸ் யூக்களையும் சொல்லிக் கொண்டிருக்கிறார். இறுதியாக கேமராவுக்கு முத்தம் கொடுத்து வீடியோவை முடிக்கிறார்.

joy crizildaa Challenge to Madhampatty Rangaraj For DNA Test Instagram Post Goes Trending

எது நியாயம்: இப்படி இருக்கும்போது, மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவியோ, நான் எனது கணவருடன் கடைசி வரை இருப்பேன், அவரை எப்போதும் காப்பாற்றுவேன் என்று அறிக்கை வெளியிட்டார். அதற்கு ஜாய் கிரிசல்ட்டாவோ, மாதம்பட்டி ரங்கராஜ் என்னையும் ஏமாற்றியுள்ளார், உங்களையும் ஏமாற்றி உள்ளார். எனவே நீங்கள் நியாயத்தின் பக்கம் நில்லுங்கள் என்று பதிவிட்டார்.

DNA Testக்கு வாங்க:இப்படி இருக்கும்போது ஜாய் கிரிசல்ட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " ஹலோ ஹஸ்பண்ட் மாதம்பட்டி ரங்கராஜ் DNA பரிசோதனைக்கு நீங்கள் அறிக்கை கொடுத்துள்ளீர்கள், ஆனால் அவர் எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? என்ன பயம்? அடிக்கடி பணம் கொடுத்து ஊடகங்களில் எனக்கெதிராக யூடியூப், செய்திகளில் தகவல்கள் வெளியிடச் செய்கிறீர்கள். நான் அமைதியாக இருந்தாலும், உங்க உள்குத்து என்னன்னு எனக்கு தெரியாம போய்டுமா என்ன ? தைரியம் இருந்தால் DNA test கு வாங்க Husband மாதம்பட்டி ரங்கராஜ் சும்மா அறிக்கை குடுத்தா மட்டும் போதாது " என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X