மகன் விஷயத்தில் முடிவெடுத்த ஜாய் கிரிஸில்டா.. விரைவில் செய்யப்போறாராம்.. அவரே சொன்ன விஷயம்
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரை அடுத்து இந்த விவகாரம் புது புது அதிர்ச்சியை கொடுத்துவருகிறது. ஜாய் கிரிஸில்டாவுக்கு குழந்தை பிறந்ததன் காரணமாக இந்த விவகாரம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் இன்னமும் முடியாமல் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜாயின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ஜாய் கிரிஸில்டா இப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். முதல் திருமண வாழ்க்கைதான் சுமூகமாக இல்லை; இந்தத் திருமண வாழ்க்கையாவது நல்லபடியாக இருக்கும் என்று நினைத்திருந்தார். ஆனால் தன்னை கர்ப்பமாக்கி மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் அவர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாதம்பட்டி தொடர்பாக வீடியோக்களை போட்டுவந்தார்.

ரங்கராஜுக்கு செக்: இதற்கிடையே தன்னைப் பற்றி ஜாய் கிரிஸில்டா அவதூறாக பேசுகிறார்; அவர் வெளியிடும் வீடியோக்கள், புகைப்படங்களால் தனது பெயருக்கு தன்னுடைய நிறுவனத்துக்கும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. எனவே அவர் தன்னை பற்றி பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாதம்பட்டி ரங்கராஜும் நீதிமன்ற படிகள் ஏறினார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அதெல்லாம் தடை விதிக்க முடியாது என்று அதிரடி உத்தரவிட்டார்.
மகிழ்ச்சியில் ஜாய்: நீதிபதியின் இந்தத் தீர்ப்பு கிரிஸில்டாவுக்கு உச்சக்கட்ட சந்தோஷத்தை கொடுத்தது. இது ஒருபக்கம் இருக்க அண்மையில்தான் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததால் இப்பிரச்னை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் இல்லை. மாறாக, டி.என்.ஏ டெஸ்ட்டில் தன்னுடைய குழந்தைதான் என்று நிரூபித்தால்; இக்குழந்தையை காலம் முழுக்க காப்பாற்றுவேன் என மாதம்பட்டி ரங்கராஜ் கூறிவிட்டார்.
புதிய புகார்: ஆனால் டி.என்.ஏ பரிசோதனைக்கு இன்னமும் ரங்கராஜ் வரவில்லை. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஜாய் அளித்த புகார் ஒன்றில், "என்னை ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாமீனில் வர முடியாதபடி வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தற்போது குடியிருக்கும் வீட்டுக்கான ஒப்பந்தம் 2026 பிப்ரவரியுடன் முடிவடைகிறது. அதுமட்டுமின்றி என்னுடைய இரண்டு குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள பணம் தேவைப்படுவதால் விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்" என கோரியிருந்தார்.
ட்ரெண்டாகும் ஸ்டோரி: இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அவர், "ராகா ரங்கராஜின் புகைப்படங்களை வெளியிடும்படி ஏகப்பட்ட மெசேஜ்கள் எனக்கு வருகின்றன. உங்கள் அன்புக்கு நன்றி. உங்கள் இதயத்தில் அவனுக்கு இடம் கொடுத்ததற்கும் நன்றி. விரைவில் அவனது புகைப்படங்களை வெளியிடுவேன். அவனை சுற்றி நல்ல மனிதர்கள் இருப்பதால் அவர் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











