என்ன கருமம் இது.. மாதம்பட்டி ரங்கராஜையும், ஸ்ருதியையும் சிதைத்த ஜாய் கிரிஸில்டா.. ஸ்க்ரீன் ஷாட் வேற
சென்னை: இரண்டாவது திருமணம் செய்துகொண்டதை மாதம்பட்டி ரங்கராஜ் மறுத்ததை தொடர்ந்து ஜாய் கிரிஸில்டா தொடர்ந்து வீடியோக்களையும், ஆதாரங்களையும் வெளியிட்டுவருகிறார். ரங்கராஜை இறுதிவரை காப்பாற்றுவேன் என்று சொன்ன முதல் மனைவி ஸ்ருதியையும் பங்கமாக செய்துவருகிறார் ஜாய். இந்நிலையில் புதிய ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டதையும், பிறந்த ஆண் குழந்தை தன்னுடையதுதான் என்பதையும் ஒத்துக்கொண்டதாக தகவல்கள் பரவின. ஆனால் அதை ரங்கராஜ் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேலும் பிறந்திருக்கும் குழந்தை ஆண் குழந்தை தன்னுடையது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துவிட்டால் நான் அக்குழந்தையை ஏற்றுக்கொள்வேன் என்றும் தெளிவுப்படுத்திவிட்டார்.
அனைவருக்கும் ஷாக்: ரங்கராஜின் அந்த ஸ்டேட்மெண்ட் அனைவருக்குமே ஷாக்கைத்தான் கொடுத்தது. ஏனெனில் அனைத்தையும் ஒத்துக்கொண்டதாக மகளிர் ஆணையமே தெரிவித்தும்; அவர் இப்படி மறுத்திருப்பதுதான் காரணம். நீண்ட அறிக்கையை அப்படி விட்டுவிட்டு சைலெண்ட் மோடுக்கு போய்விட்டார் ரங்கராஜ். ஆனால் ஜாய் கிரிஸில்டாவோ கொந்தளிப்பின் உச்சத்தில் இருக்கிறார்.

ஸ்ருதியும் ஆதரவு: இவ்விவகாரம் தலை தூக்கியபோது ரங்கராஜுக்கு முதல் மனைவி ஸ்ருதியின் சப்போர்ட் கண்டிப்பாக இருக்காது என்றுதான் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஸ்ருதியோ மகளிர் ஆணையத்தில் நடந்த விசாரணைக்கு ரங்கராஜுடன் வந்து அதிர்ச்சி கொடுத்தார். அதுமட்டுமின்றி நேற்றுகூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "பணம் பறிப்பதும், எங்களை பிரிப்பதும்தான் கிரிஸில்டாவின் நோக்கம். கண்டிப்பாக இறுதிவரை எனது கணவரை நான் காப்பாற்றுவேன்" எனவும் சபதம் எடுத்திருக்கிறார்.
அட்டாக் செய்த கிரிஸில்டா: ஸ்ருதியின் அந்தப் பதிவு பலரையும் ஆச்சரியத்தைத்தான் கொடுத்திருக்கிறது. விவாகரத்தும் செய்யாமல், இத்தனை நாட்கள் மறைத்து இன்னொரு பெண்ணுடன் பழகி குழந்தை உருவாக காரணமாக இருந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு இப்படி கண்மூடித்தனமாக ஸ்ருதி ஆதரிக்கிறாரே என்று ரசிகர்களில் ஒருதரப்பினர் கவலை கொள்ளவும் செய்தார்கள். கிரிஸில்டாவும் தனது பங்குக்கு, 'அவரு உனக்கு மட்டுமா புருஷனா இருந்தாரு' என்றும் மறைமுகமாக அட்டாக் செய்திருந்தார்.
புதிய ஆதாரம்: அதேபோல் ஏகப்பட்ட ஆதாரங்களை வரிசையாக இறக்கிவரும் ஜாய் இப்போது புதிய ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்திருக்கிறார். அதாவது தன்னுடன் நல்லபடியாக வாழ்ந்தபோது ரங்கராஜ் அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்தான் அது. அதில், மாதம்பட்டி ரங்கராஜ் என்ன நிறத்திலான உடை உடுத்தலாம் என்று ஐடியா கொடுத்திருக்கிறார் ஜாய். ரங்கராஜும், லவ் யூ எல்லாம் சொல்லி, மேட் ஃபார் ஈச் அதர் என்றும் தங்களை நினைத்து பெருமைப்பட்டிருக்கிறார்.
என்ன கருமம் இது?: மேலும் இந்த ஸ்க்ரீன் ஷாட்டோடு கிரிஸில்டா தனது ட்விட்டர் பக்கத்தில், "இவரு வருவாராம் கல்யாணம் பண்ணுவாராம் குழந்தை குடுப்பாராம் அப்புறம் ஓடி போவாராம் பெண்கள் வாழ்க்கையை அழிப்பாராம் இதுல இவங்க protect பண்ணுவாகலாம் என்ன கருமம் டா இது.. உருகி உருகி லவ் பண்ணிட்டு blackmail னு சொன்னா எப்புடி so called husband" என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











