என்னை நல்லா பார்த்துக்கோ..ஜாய் கிரிஸில்டாவிடம் வயிறையெல்லாம் தூக்கி காண்பிக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு வருவதற்கு தொடர்ந்து மறுத்துவரும் நிலையில்; ஜாய் கிரிஸில்டாவோ புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறக்கியிருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு காதலோடு இருந்துவிட்டு இப்போது ஒதுங்க நினைப்பதெல்லாம் பாவம் செய்வதற்கு ஒப்பானது என்று கமெண்ட்ஸ் செய்து அந்த வீடியோவை ட்ரெண்டாக்கிவருகின்றனர்.
இரண்டாவது திருமண விவகாரத்தை காவல் நிலையம்வரை கொண்டு சென்ற ஜாய் கிரிஸில்டாவுக்கு சில வாரங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததால் மாதம்பட்டி ரங்கராஜ் கண்டிப்பாக இறங்கி வருவார் என்றே அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ டி.என்.ஏ டெஸ்ட்டில் நிரூபிக்கப்பட்டால் பிறந்த குழந்தையை கடைசிவரை பார்த்துக்கொள்வேன் என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.
வர மறுக்கும் ரங்கராஜ்: ஆனால் ரங்கராஜோ அந்த சோதனைக்கு இதுவரை வரவில்லை. உண்மை அவர் பக்கம் இருந்திருந்தால் உடனடியாக அந்த சோதனையை செய்து தான் களங்கமற்றவன் என்பதை நிரூபிக்க வேண்டியதுதானே என்று ஜாய் கிரிஸில்டாவின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பிவருகிறார்கள். ரங்கராஜோ எந்த சலனமும் இல்லாமல் சைலெண்ட் மோடுக்கு போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு தள்ளுபடி: இது ஒருபக்கம் இருக்க தனது நிறுவனத்தை தொடர்புப்படுத்தி பேச ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற சூழலில்; அதெல்லாம் தடை விதிக்க முடியாது என சொல்லி வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிபதி. இது மாதம்பட்டி தரப்புக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
புதிய வீடியோ: சூழல் இப்படி இருக்க தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் கிரிஸில்டா. அதில், 'பொண்டாட்டி. லவ் யூ. கடவுள் எனக்கு கொடுத்த கிஃப்ட் நீ. கடைசிவரை நல்லா பார்த்துக்கோ. கிளம்பிட்டேன். பெல்ட் போட்டுட்டேன் (வயிற்றை தூக்கி காட்டியபடி சொல்கிறார்). சாக்ஸ் போட்டுட்டு ஷூ போட்டுக்குறேன். நீ வந்த பிறகுதான் நான் எனர்ஜியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். இன்னைக்கு ஃபுல் டே ஆஃபிஸ்தான். மிஸ் யூ" என்று மாதம்பட்டி ரங்கராஜ் உருகியிருக்கிறார்.
ஸ்டோரியிலும் அடிதான்: இந்த வீடியோ மட்டுமின்றி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "தைரியம் இருந்தால் வெளியே வாருங்கள். நீங்கள் மகனின் அக்கவுண்ட்டை வேண்டுமானால் நீக்கலாம். ஆனால் அவனுக்கு தந்தை என்பதை நீக்க முடியாது. அடுத்ததாக கொலை மிரட்டல் விடுவார்கள் போல. எனக்கும் எனது மகன் ராகா ரங்கராஜுக்கும் ஏதாவது ஆனால் ரங்கராஜ்தான் பொறுப்பு. எனது உயிருக்கும் ராகா ரங்கராஜ் உயிருக்கும் மாதம்பட்டிதான் பொறுப்பு ஏற்பார்" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











