கணவன் போல் பிள்ளை.. ஒரே பூரிப்பு.. நேசித்த முகம் ஆயிற்றே.. ஜாய் கிரிஸில்டா எமோஷனல்

சென்னை: ஜாய் கிரிஸில்டாவுக்கும், மாதம்பட்டி ரங்கராஜுக்கும் நடந்த இரண்டாவது திருமணம்தான் கோலிவுட்டில் சமீபமாக புயலை கிளப்பிய விவகாரமாக மாறியிருக்கிறது. கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்ததால் இந்த பஞ்சாயத்து முடிந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் நீண்டுகொண்டே செல்கிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாய் கிரிஸில்டா எமோஷனலாக போஸ்ட் போட்டிருக்கிறார்.

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கும், நடிகர், சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜுக்கும் இடையே ரகசியமாக இரண்டாவது திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து சில காலத்தில் தன்னிடமிருந்து ரங்கராஜ் ஒதுங்குவது போல் இருந்ததால் புகைப்படங்களை வெளியிட்டார் ஜாய். ஃபோட்டோக்களை வெளியிட்டது மட்டுமின்றி காவல் நிலையத்தில் புகாரையும் அளித்தார். இதன் காரணமாக இந்த விவகாரம் பரபரப்புக்குள்ளானது.

மாறி மாறி அதிரடிதான்: ஜாய் கிரிஸில்டா புகார் கொடுத்ததை அடுத்து ரங்கராஜும் நீதிமன்றத்துக்கு சென்றார். ஆனால் அவரை பற்றி கிரிஸில்டா பேச தடை விதிக்க முடியாது என்று அதிரடி காட்டியது கோர்ட். இது ஒருபக்கம் இருக்க தொடர்ந்து அவரை அட்டாக் செய்து போஸ்ட்டுகளை போட்டும், பேட்டியும் கொடுத்துவந்தார் ஜாய். இப்படிப்பட்ட நிலைமையில்தான் கர்ப்பமாக இருந்த அவர் ஆண் குழந்தை ஒன்றை சமீபத்தில் பெற்றெடுத்தார்.

Joy Crizildaa Emotional Post Goes Trending Amid Ongoing Dispute with Actor Madhamapatty Rangaraj
Photo Credit:

ட்விஸ்ட் அண்ட் டர்ன்: குழந்தை பிறந்த சூழலில்; இரண்டாவது திருமணத்தை ரங்கராஜ் ஒத்துக்கொண்டார் என்றும்; பிறந்திருக்கும் குழந்தை தன்னுடையதுதான் என்பதை ஏற்றுக்கொண்டார் என்றும் மகளிர் ஆணையம் தெரிவித்தது. ஆனால் தனக்கு நடந்த திருமணம் மிரட்டலால் நடந்தது; டிஎன்ஏ டெஸ்ட்டில் நிரூபித்தால் குழந்தையை ஏற்றுக்கொள்வேன் என்றும் ட்விஸ்ட் அடித்தார். இதனால் கடுப்பான ஜாய் கிரிஸில்டா வழக்கம்போல் இன்ஸ்டாகிராமில் அதிரடியான போஸ்ட்டுகளை வெளியிட்டார்.

ஒத்துக்கொண்ட ரங்கராஜ்: அப்படி அவர் வெளியிட்டிருந்த ஒரு வாட்ஸ் அப் ஸ்க்ரீன் ஷாட்டில், 'பிறக்கும் குழந்தை தன்னுடையதுதான். எனக்கும் அந்த குழந்தை விஷயத்தில் பொறுப்பு இருக்கிறது; என ரங்கராஜ் தெரிவித்திருந்தது தெரியவந்தது. இப்படி பேசிய அவர் இப்போது ஏன் மாற்றி பேசுகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் ரங்கராஜோ வழக்கம்போல் அறிக்கையை வெளியிட்டுவிட்டு சைலெண்ட் மோடுக்கு போய்விட்டார்.

எமோஷனல் ஜாய் கிரிஸில்டா: ஆனால் ஜாய் கிரிஸில்டாவோ தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். அவ்வப்போது எமோஷனலாகவும் போஸ்ட் போட்டுவருகிறார். அந்தவகையில் இப்போது அவர் போட்டிருக்கும் போஸ்ட் ஒன்றும் கவனம் ஈர்த்திருக்கிறது. தனது இன்ஸ்டா ஸ்டோரியில், "குழந்தை தன்னை போன்று இல்லை என பொய்யாவாகவே கோபம் கொள்கிறாள். தன் கணவன் போல் இருப்பதை எண்ணி உள்ளுக்குள் பூரித்துப்போகிறாள் ஒவ்வொரு பெண்னும். அவள் நேசித்த முகம் ஆயிற்றேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக மாதா மாதம் தனக்கு ஆறரை லட்சம் ரூபாய் ஜீவனாம்சம வழங்க கிரிஸில்டா கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X