ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை.. மாதம்பட்டி ரங்கராஜ் ஆசைப்பட்டது நடக்கல.. வேற மாதிரி நடந்துடுச்சே

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா அளித்த புகாரை அடுத்து அவர்கள் இரண்டு பேரிடமும் மகளிர் ஆணையம் சமீபத்தில்தான் விசாரணை நடத்தியது. இது ஒருபக்கம் இருக்க அவர் தனக்கு மாதம் 6.50 லட்சம் ரூபாய் தர வேண்டும் என நேற்றுகூட புதிய மனுவை ஜாய் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்திருக்கிறடு.

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கும், சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் திருமணத்தில் சென்று முடிந்தது. அந்த இரண்டாவது திருமணம் தொடர்பான புகைப்படங்களை கிரிஸில்டா வெளியிட்ட பிறகுதான் இந்த விவகாரம் வெளியுலகத்துக்கு தெரியவந்தது. இந்த விஷயம் லீக்கான சில நாட்களிலேயே முதல் மனைவி ஸ்ருதியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ரங்கராஜ்.

புகார் அளித்த ஜாய் கிரிஸில்டா: இதனால் கொதிப்படைந்த இரண்டாவது மனைவி ரங்கராஜ் மீது புகார் அளித்தார். மேலும் அவர் தன்னிடம் பேசிய வீடியோக்கள், தன்னுடன் இருந்த புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டே இருந்தார். அதற்கு கடிவாளம் போட வேண்டும் என்ற நோக்கத்தில் நீதிமன்றத்துக்கு சென்ற ரங்கராஜுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படிப்பட்ட சூழலில் இந்த வழக்கை மகளிர் ஆணையம் விசாரிக்க ஆரம்பித்தது.

Joy Crizildaa Gives Birth to Baby Boy But Madhampatty Rangaraj was expecting a girl
Photo Credit:

முதல் மனைவியுடன் ஆஜர்: அந்த விசாரணை சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அப்போது கிரிஸில்டா தனது வழக்கறிஞருடன் ஆஜராக; மாதம்பட்டியோ தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் ஆஜரானார். ரங்கராஜுக்கு துணையாக ஸ்ருதி வந்திருந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்திய்து. இப்படி பெண்கள் இருப்பதால்தான் ஆண்கள் துணிந்து தவறு செய்கிறார்கள் என கடுமையாக நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் பேச ஆரம்பித்தார்கள்.

ஆண் குழந்தை பிறந்தது: அடுத்தடுத்து விசாரணை நடக்கவிருக்கும் நிலையில் நேற்று ஜாய் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் மாதா மாதம் பராமரிப்பு செலவுக்கு 6.50 லட்சம் ரூபாயை ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்நிலையில் இன்று ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தாயும், சேயும் நலமாக இருப்பதாகவே தெரிகிறது. குழந்தை பிறந்த விஷயத்தை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

Joy Crizildaa Gives Birth to Baby Boy But Madhampatty Rangaraj was expecting a girl
Photo Credit:

எதிர்பார்த்தது ஒன்னு நடந்தது வேறு: இது ஒருபக்கம் இருக்க சில வாரங்களுக்கு முன்பு ஜாய் கிரிஸில்டா வெளியிட்டிருந்த ஒரு பதிவில் தங்களுக்கு பெண் குழந்தைதான். குழந்தை என்ன பாலினம் என்று நாங்கள் பரிசோதித்து பார்க்கவில்லை. பெண் குழந்தை வேண்டும் என்றுதான் ரங்கராஜ் ஆசைப்பட்டதாக தெரிவித்திருந்தார். மேலும் பிறக்கப்போகும் பெண் குழந்தைக்கு ராஹா ரங்கராஜ் என்று பெயரையும் முடிவு செய்து வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்போது ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இருப்பினும் ஜாய் கிரிஸில்டா மகிழ்ச்சியாகவே இருப்பார். அதேபோல் இனியாவது மாதம்பட்டி ரங்கராஜ் மனம் இறங்கி வருவாரா என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள். முன்னதாக முதல் மனைவி ஸ்ருதிக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Read more about: madhampatty rangaraj
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X