Joy Crizildaa: மீண்டும் மாதம்பட்டி ரங்கராஜூக்கு சிக்கல்.. தரமான சம்பவத்தை செய்த ஜாய் கிரிஸில்டா!
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு, தான் கருவுற்ற நிலையில், தன்னிடமிருந்து விலகியதாக ஜாய் கிரிசில்டா ஏற்கனவே புகார் அளித்திருக்கும் நிலையில், மீண்டும் ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார்.
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கடந்த செப்டம்பர் மாதம் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து, மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிறிஸ்டில்லாவை திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக்கொண்டதாகவும், குழந்தை தன்னுடையது தான் என ஏற்றுக்கொண்டதாக ஜாய் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.

ஜாய் கிரிஸில்டா: இதை மறுத்த மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டாவை நான் திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை, குழந்தைக்கு DNA test எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். ஆனால், அந்த அறிக்கை பல மாதங்கள் ஆன போதும், மாதம்பட்டி ரங்கராஜ் டிஎன்ஏடெஸ்டுக்கு எடுக்க வரவில்லை என ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமாம், அதான் ஓளிந்து ஓடுகிறார். ப்ரூப் பண்ணிவிட்டால், சார் மாடிப்பார் என பயப்படுகிறார். ஒருவேலை பணம் குடுத்து DNA test correct பண்ண time எடுக்கிறார் போல? என தொடர்ந்து பதிவிட்டு வந்த போதும் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இருந்து எந்தவிதமான கருத்தும் வரவில்லை.
மீண்டும் புகார்: இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நான் குடியிருக்கும் வீட்டின் ஒப்பந்தம் வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைய உள்ளது. எனது 2 குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள பணம் தேவைப்படுகிறது. எனவே இந்த வழக்கை விரைவாக விசாரித்து நல்ல தீர்பு கிடைக்க போலீசார் எனக்கு உதவி செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











