மாதம்பட்டி ரங்கராஜை நோக்கி ஏன் ஒரு கேள்வி இல்லை.. ஜாய் கிரிசல்ட்டா பளார் கேள்விகள்!

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசல்ட்டா இடையேயான பிரச்னை தொடங்கியதில் இருந்து இணையவாசிகள் இரு தரப்பையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இப்படி இருக்கும்போது, பயில்வான் ரங்கநாதன் போன்றோர் ஜாய் கிரிசல்ட்டாவை நோக்கியே கேள்விகளை முன் வைத்து வந்தனர். இப்படி இருக்கையில், மாதம்பட்டி ரங்கராஜை நோக்கி ஏன் எந்த கேள்விகளும் எழுப்பப்படுவது இல்லை என்ற கேள்வியை முன் வைத்துள்ளார், ஜாய் கிரிசல்ட்டா.

நவம்பர் மாதம் தொடக்கத்தில் ஜாய் கிரிசல்ட்டா - மாதம்பட்டி ரங்கராஜ் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இப்படி இருக்கும்போது மாதம்பட்டி ரங்கராஜ் அந்த குழந்தை தன்னுடையதா என்று சோதித்து பார்க்க டி.என்.ஏ பரிசோதனைக்கு தயார் என்றும், அப்படி டி.என்.ஏ பரிசோதனையில் குழந்தை தன்னுடையது என்று வந்துவிட்டால், அந்த குழந்தைக்கு முழுப் பொறுப்பை ஏற்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

joy crizildaa instagram post about Why No One Raise Question Against Madhampatty Rangaraj

மாதம்பட்டி இவ்வாறு சொன்னதும் இணையத்தில் பலரும் ஜாய் கிரிசல்ட்டாவை நோக்கி பல கேள்விகளை முன்வைத்தனர். அதாவது அவரது நடத்தையை சந்தேகிக்கும் கேள்விகளை முன்வைத்தனர். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜை நோக்கிய கேள்விகள் என்பது மிகவும் சொற்ப அளவிலேயே இருந்தது. அதே நேரத்தில் டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு தயார் என்று சொன்ன மாதம்பட்டி ரங்கராஜ், விசாரணையில் டி.என்.ஏ பரிசோதனை தேவையில்லை என்றும், வயிற்றில் இருப்பது தனது குழந்தைதான் என்றும் தெரிவித்ததாக ஜாய் கிரிசல்ட்டா தெரிவித்திருந்தார்.

டி.என்.ஏ பரிசோதனைக்கு தயார் என்று அறிக்கை வெளியிட்ட பின்னர் மாதம்பட்டி ரங்கராஜ், ஏன் இன்னும் டி.என்.ஏ பரிசோதனைக்கு வரவில்லை என்றும் எனது நடத்தை குறித்து கேள்வி கேட்பவர்கள் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து ஏன் கேள்வி எழுப்புவதில்லை என்று கேட்டும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும், ஜாய் கிரிசல்ட்டா 5 மாத கால கர்ப்பிணியாக இருக்கும்போது, அந்த குழந்தை என்னுடையது என்றும் அதற்கு தனக்கும் பொறுப்பு இருப்பதாகவும் மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு வாட்ஸ்அப் செய்துள்ளதாக ஸ்கிரீன் ஷாட் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

joy crizildaa instagram post about Why No One Raise Question Against Madhampatty Rangaraj

டி.என்.ஏ டெஸ்ட்: இந்த பதிவில், " அவரே குழந்தை தன்னுடையதென்று ஒப்புக்கொண்டிருந்தும், உலகத்துக்காக DNA செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் எதை நிரூபிக்க முயன்றார்? DNA செய்ய வேண்டும் என்று கேட்ட போது, உலகம் தயக்கமின்றி அந்தப் பெண்ணின் குணநலனையே குறை சொல்லத் தொடங்கியது. ஆனால் இப்போது DNA க்கு வரவே தயங்கிக் கொண்டிருக்கும் அந்த ஆணை குறித்து யாரும் கேள்வி கேட்கவில்லை; அவர் வழக்கை இழுத்தடித்து கொண்டே இருக்கிறார்.

பளார் கேள்விகள்: இப்படியான சூழலில் உலகம் அவரைப் பற்றி எப்படி பார்க்கும்? குளிர் அறையில் வசதியாக அமர்ந்து ஒரு பெண்ணின் குணநலனை கேள்வி கேட்கும் பலருக்கு, அந்த ஆண் ஏன் இப்படிச் செய்கிறார் என்ற கேள்வியை எழுப்ப கூடத் தெரியவில்லை என்பதுதான் மிகப்பெரிய விந்தை" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு ஆதரவாக கமெண்ட் போட்ட இணைய வாசியின் பதிவுக்கு, " உண்மையை யாராலும் வெகு காலத்திற்கு மறைத்து வைக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கேள்விகள் அடங்கிய பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X