மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவியை லாக் செய்த ஜாய் கிரிஸில்டா.. என்ன கேள்வி வந்திருக்குனு பாருங்க

சென்னை: ஜாய் கிரிஸில்டா - மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்றே தோன்றுகிறது. திருமணத்தை தான் ஒத்துக்கொள்ளவே இல்லை என்று அவர் மறுத்ததை தொடர்ந்து கிரிஸில்டா காட்டமாக வீடியோக்களை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து முதல் மனைவியான ஸ்ருதியும் தன் பங்குக்கு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஸ்ருதிக்கு ஜாய் கிரிஸில்டா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா தம்பதிக்கு ஆண் குழந்தை சில நாட்களுக்கு பிறந்தது. முதலில் அவர் இரண்டாவது திருமணத்தையும், ஆண் குழந்தை தன்னுடையதுதான் என்பதையும் ஒத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த சூழலில் அதனை அவர் மறுத்துவிட்டார். அதுமட்டுமின்றி டி.என்.ஏ டெஸ்ட் மூலம் அக்குழந்தை தன்னுடையது என்று நிரூபிக்கப்பட்டால் பார்த்துக்கொள்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.

ஸ்ருதியின் அறிக்கை: இப்படி ஒரு ட்விஸ்ட்டை அவர் அடித்ததை அடுத்து ஜாய் கிரிஸில்டா காட்டமாகி வீடியோக்களை வெளியிட்டார். மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி வெளியிட்டிருந்த அறிக்கையில், "இந்த வருடம் மார்ச் மாதம் நான் எனது குடும்ப புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டபோது ஏப்ரல் மாதத்தில் ஜாய் கிரிஸிடாவிடமிருந்து அவமதிப்பான மெசேஜ்களை பெற்றேன். அவர் ஊடகங்களை தவறாக பயன்படுத்துகிறார்.

Joy Crizildaa Madhampatty Rangaraj Controversy Shruthi s Statement and Joy s Sharp Reply
Photo Credit:

குலைக்க முயற்சி: எங்கள் குடும்ப அமைதியை குலைக்க முயற்சி செய்வது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. அவர் தனது சொந்த கையெழுத்தில் எழுதிய கடிதத்தில் எனது கணவர் ரங்கராஜிடமிருந்து பணம் பறிப்பதும் எங்களை பிரிப்பதும்தான் தனது நோக்கம் என்றும் தெளிவாக கூறியிருக்கிறார். பணம் பறித்து சட்டப்பூர்வ மனைவியான எனது குடும்ப வாழ்க்கையை நாசம் செய்வது என்பதுதான் அவரது நோக்கம். நான் எனது கணவர் ரங்கராஜுடன் உறுதியாக நிற்கிறேன். அவரை இறுதிவரை காப்பாற்றுவேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ரசிகர்கள் ரியாக்‌ஷன்: இவ்வளவு நடந்த பிறகும் ரங்கராஜை ஸ்ருதி விட்டுக்கொடுக்காமல் நிற்பதற்கு ஒருதரப்பினர் ஆதரவு கொடுத்தாலும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பையே பதிவு செய்துவருகிறார்கள். ஸ்ருதி என்னவகையான லாஜிக்கில் ரங்கராஜோடு துணை நிற்கிறார்; சொல்லப்போனால் இரண்டு பேரையுமே மாதம்பட்டி ஏமாற்றியிருக்கிறார் என்று சகட்டுமேனிக்கு பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

ஜாய் கிரிஸில்டா பதிவு: ஸ்ருதி அப்படி இன்ஸ்டாவில் குறிப்பிட்டதை தொடர்ந்து ஜாய் கிரிஸில்டாவின் பதிலடி என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "அவரு உனக்கு மட்டுமா புருஷனா இருந்தாரு?" என்று கேள்வி எழுப்பி கலாய்த்திருக்கிறார். இந்தப் பதிவும் தற்போது சோஷியல் மீடியாக்களில் கவனம் ஈர்க்க தொடங்கியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X