நாம செமயா வாழ்ந்து காட்டணும்.. ஜாய் கிரிஸில்டாவின் அட்டகாசமான போஸ்ட்.. மாதம்பட்டிக்கு பதிலடி
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதை ஒத்துக்கொள்ள வைக்க ஜாய் கிரிஸில்டா படாத பாடு பட்டுவருகிறார். சட்டப்பூர்வமாக நடவடிக்கையை தொடங்கியிருந்தாலும் ரங்கராஜ் பிடிகொடுக்க மறுக்கிறார். இது ஒருபக்கம் இருக்க அவரை கடுமையாக தாக்கியும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட்டை போட்டுவருகிறார். இந்நிலையில் அவரது இன்ஸ்டா ஸ்டோரி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஜாய் கிரிஸில்டாவுக்கும் ரகசியமாக நடந்த திருமணம் பொதுவெளிக்கு தெரிய வந்ததிலிருந்து பெரிய பஞ்சாயத்ஹ்டாக மாறியிருக்கிறது. காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து இரண்டு பேரிடமும் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின்போது, தன்னுடைய இரண்டாவது திருமணத்தை ரங்கராஜ் ஒத்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதனை அவர் மறுத்துவிட்டார்.
ஆண் குழந்தை: இதற்கிடையே நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிஸில்டா சமீபத்தில்தன் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு ராகா ரங்கராஜ் என்று பெயர் வைத்திருக்கிறார். குழந்தை பிறந்ததை அடுத்து ரங்கராஜின் மனநிலையில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ டி.என்.ஏ டெஸ்ட்டில் நிரூபியுங்கள் என்று கறாராக கூறி சைலெண்ட் மோடுக்கு சென்றுவிட்டார்.

ஜாய் கிரிஸில்டாவின் அட்டாக்: அவர் இப்படி சொல்வார் என்று யாருமே நினைக்கவில்லை. ரங்கராஜின் இந்த பதிலடி ஜாயை மேற்கொண்டு கொதிப்படைய செய்தது. இதன் காரணமாக அவரை அட்டாக் செய்து போஸ்ட்டுகளையும் போட்டுவருகிறார். சமீபத்திகூட, 'டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு வருவதாக சொன்ன எனது கணவர் இன்னும் வரவில்லை. யாராவது அவரை பார்த்தால் வர சொல்லுங்கள்' என ஸ்டோரி வைத்திருந்தார். இதே மாதிரி பல போஸ்ட்டுகளை போட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
முதல் மனைவிக்கும் அடி: அதேபோல் ரங்கராஜுக்கு அவரது முதல் மனைவி ஸ்ருதி சப்போர்ட் செய்திருக்கிறார். அதனையும் கடுமையாக ட்ரோல் செய்துவருகிறார் கிரிஸில்டா. ஒரு இன்ஸ்டா ஸ்டோரியில், 'உன் புருஷன் உனக்கு மட்டுமே புருஷன்' என்று கிண்டல் செய்திருந்தார். இவர் மட்டுமின்றி ரங்கராஜுக்கு சப்போர்ட் செய்ததற்காக ஸ்ருதியை ரசிகர்களில் ஒருதரப்பினரும் கடுமையாக எதிர்த்துவருகிறார்கள்.
ஜாய் கிரிஸில்டாவின் ஸ்டோரி: இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா இன்ஸ்டாகிராமில் புதிய ஸ்டோரி ஒன்றை வைத்திருக்கிறார். அதாவது நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் அவர், "நாம் நல்லா வாழ்ந்துகாட்டுவதுதான் நாம் வாழவே கூடாதுனு நினைக்கிறவங்களுக்கு நாம் கொடுக்கிற பெரிய தண்டனை" என்று விஜய் பேசும் வசனத்தை எடிட் செய்து வைத்திருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் இப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











