முதல் கணவருடன் டைவர்ஸ்.. மாதம்பட்டி ரங்கராஜ்தான் காரணம்.. நிறைய அடி.. புலம்பும் ஜாய் கிரிஸில்டா
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணத்தை மறுக்க; அவருக்கு முதல் மனைவி ஸ்ருதி ஆதரவு கொடுக்க; இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா நெருக்கடி கொடுக்க என இந்த விவகாரம் சிந்துபாத் கதை போல் நீண்டுகொண்டே செல்கிறது. இந்நிலையில் ஜாய் தனது முதல் திருமண வாழ்க்கை பற்றியும், அதில் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றியும் ஓபனாக பேசியிருக்கிறார்
ஜாய் கிரிஸில்டாவுடனான இரண்டாவது திருமணத்தை மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக்கொண்டார் என்று செய்திகள் வெளியானதை அடுத்து இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வந்துவிடும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் தன்னை மிரட்டித்தான் ஜாய் திருமணம் செய்துகொண்டார் என்றும்; பிறந்திருக்கும் குழந்தை தன்னுடையதுதானா என்பதை டிஎன்ஏ டெஸ்ட் மூலம் உறுதி செய்தால் அதனை காலம் முழுவதும் பார்த்துக்கொள்வேன் என்று ரங்கராஜ் சொன்னதால் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது.
முதல் மனைவியின் ஆதரவு: யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த விவகாரத்தில் மாதம்பட்டிக்கு அவரது முதல் மனைவி ஸ்ருதி பெரிய ஆதரவாக நின்றுகொண்டிருக்கிறார். என்னையும் எனது கணவரையும் பிரித்து பணம் பறிப்பதுதான் கிரிஸில்டாவுக்கு நோக்கம் என்று ஒரே போடாக போட்டார். அதுமட்டுமின்றி இறுதிவரை எனது கணவரை காப்பாற்றுவேன் என்றும் உறுதிமொழி எடுத்திருக்கிறார் ஸ்ருதி.

அட்டாக் செய்யும் ஜாய் கிரிஸில்டா: அதேசமயம் ஜாய் கிரிஸில்டா இதனை விடுவதாக இல்லை. ரங்கராஜ் அவ்வாறு அறிக்கை வெளியிட்ட பிறகு ஏகப்பட்ட வீடியோக்களை ஆதாரமாக முன்வைத்துவருகிறார். அதுமட்டுமின்றி ஸ்ருதியையும் மறைமுகமாக விமர்சனம் செய்து போஸ்ட்டுகளை போட்டுவருகிறார். இதனால் இவ்விவகாரம் இப்போதைக்கு முடியாது என்றே தெரிகிறது. இதற்கிடையே ஜாய் கிரிஸில்டாவின் முதல் திருமணம் பற்றியும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
யார் முதல் கணவர்?: அவரது முதல் கணவர் பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குநர் ஃபெட்ரிக் ஆவார். அந்தத் தம்பதிக்கு ஜேடன் என்ற மகனும் இருக்கிறார். அவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டதால் விவாகரத்தும் பெற்றுவிட்டார். அந்த டைவர்ஸுக்கு பலரும் பல காரணங்களை சொல்கிறார்கள். அதுமட்டுமின்றி மாதம்பட்டி ரங்கராஜுக்காக இவ்வளவு சண்டை செய்யும் ஜாய் முதல் திருமண வாழ்க்கையை தக்க வைத்துக்கொள்ள இதே முயற்சியை செய்திருக்கலாமே என்றும் குரல்கள் கேட்கின்றன.
ஜாய் கிரிஸில்டா பேட்டி: ஆனால் தனது முதல் திருமண வாழ்க்கை குறித்து பெரிதாக பொதுவெளியில் எதுவும் பேசாமலே இருந்துவந்தார். இனியும் அமைதியாக இருந்தால் சரியாக இருக்காது என்று நினைத்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அதுகுறித்து பேசியிருக்கிறார். அவர் அந்தப் பேட்டியில், "என்னுடைய முதல் திருமண வாழ்க்கை மோசமாகவே இருந்தது. நிறைய பிரச்னைகள். உடல் ரீதியான துன்புறுத்தல்களை அதில் நான் சந்தித்தேன். அதனால்தான் அதிலிருந்து நான் வெளியே வந்தேன்.
ரங்கராஜ் கொடுத்த தைரியம்: அந்த சமயத்தில்தான் ரங்கராஜ் என்னிடம், 'ஏன் தங்கம் ஃபெட்ரிக்கின் பணத்தில்தான் நீயும், ஜேடனும் வாழ வேண்டுமா?.. ஏன் நான் இல்லையா?.. நான் பார்த்துக்கொள்ளமாட்டேனா?.. எதற்காக இந்த விவகாரத்தை இழுத்துக்கொண்டிருக்கிறாய். நீ பேசாமல் மியூச்சுவல் டைவர்ஸ் கொடுத்துவிடு' என்று சொன்னார். அப்போதும் நான் இரண்டு முறை அவரிடம், 'உறுதியாக சொல்கிறீர்களா. நாளை அனைத்தையும் இழந்து நான் நடு ரோட்டில் நிற்க வேண்டியது இருக்கும். என்னைவிட எனது மகன் ஜேடன் பாதிக்கப்படுவான்' என்று சொன்னேன். அவர் உறுதியாக பார்த்துக்கொள்வேன் என கூறினார். அவர் சொல்லித்தான் அந்த விவாகரத்து நடவடிக்கையிலேயே இறங்கினேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











