இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்?.. மாதம்பட்டி ரங்கராஜ் சிக்கிட்டாரு.. மகனின் ஆப்பு.. ஜாய் கிரிஸில்டா அதிரடி
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு வராமல் இருப்பதால் அவரை கிண்டல் செய்தும், தாக்கியும் ஜாய் கிரிஸில்டா தொடர்ந்து போஸ்ட்டுகளை போட்டுவருகிறார். ஆனால் ரங்கராஜோ இன்னமும் சைலெண்ட் மோடிலிருந்து வெளியே வரவில்லை. சூழல் இப்படி இருக்க மாதம்பட்டி ரங்கராஜ் சிக்கிவிட்டதாக ஜாய் போட்டிருக்கும் போஸ்ட் ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக புகார் கொடுத்த ஜாய் கிரிஸில்டா கடந்த மாதத்தில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் ரங்கராஜோ தனக்கு நடந்த இரண்டாவது திருமணத்தையும், பிறந்த குழந்தையையும் ஏற்றுக்கொள்ளவும் இல்லாமல்; ஒத்துக்கொள்ளவும் இல்லாமல் அடம் பிடித்துக்கொண்டிருக்கிறார். அவரை எப்படியாவது வழிக்கு கொண்டு வர பல்வேறு விதங்களில் முயன்றுவருகிறார் ஜாய்.
டி.என்.ஏ டெஸ்ட்: இந்த விவகாரத்தில் முக்கியமாக பார்க்கப்படுவது என்றால் அது டி.என்.ஏ டெஸ்ட்தான். பிறந்திருக்கும் குழந்தை தன்னுடையதுதான் என அந்த பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டால் காலம் முழுவது அக்குழந்தையை வைத்து காப்பாற்ற நான் தயார் என்று திட்டவட்டமாக கூறினார் ரங்கராஜ். எனவே விரைவில் அந்த சோதனைக்கு சென்று இவ்விவகாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆப்சென்ட் ஆகும் மாதம்பட்டி: ஆனால் அவரோ இன்றுவரை டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு செல்லவில்லை. அவரை எப்படியாவது அந்தப் பரிசோதனைக்கு வரவைத்துவிட வேண்டும் என்பது ஜாய் கிரிஸில்டாவின் திட்டம். அதற்காக பல்வேறு வழிகளில் முயன்றுவருகிறார். ஒருநாள் கிண்டல் செய்து போஸ்ட் போடுகிறார்; மறுநாள் அதிரடியாக போஸ்ட் போடுகிறார். ஆனால் ரங்கராஜோ எந்த சலனமும் இல்லாமல் தனது வேலைகளை கவனித்துவருகிறார்.
என்ன காரணம்?: இந்தப் பரிசோதனைக்கு வராமல் காலம் தாழ்த்துவது ரங்கராஜுக்குதான் மைனஸாக அமைந்திருக்கிறது. தன் பக்கம் எந்தத் தவறும் இல்லையென்றால் தைரியமாக டெஸ்ட்டுக்கு போக வேண்டியதுதானே; இவர் பக்கம் ஏதோ பெரிய தவறு இருக்கிறது அதனால்தான் ஏதோ சாக்கு சொல்லி தப்பித்துக்கொண்டிருக்கிறார் என்று ரசிகர்களும் ஓபனாகவே சோஷியல் மீடியாவில் பேச தொடங்கிவிட்டார்கள். இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
ஜாய் கிரிஸில்டாவின் போஸ்ட்: அதாவது மாதம்பட்டி ரங்கராஜ் போன்றே மகன் ராகா ரங்கராஜும் தனது பெரு விரலையும், ஆட்காட்டி விரலையும் சேர்த்து வைத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் ஜாய் கிரிஸில்டா, "அப்பா மாதம்பட்டி ரங்கராஜ் டி.என்.ஏ டெஸ்ட் வேண்டும் என்று கேட்டார். மகன் ராகா ரங்கராஜ் அப்பாவுக்கே அப்பு வைத்தான். இதைவிட என்ன டி.என்.ஏ ப்ரூஃப் வேண்டும் உங்களுக்கு கணவரே?.. சிக்கிட்டாரு. அப்பாவை போன்றே மகனும் கைவிரல்களை வைத்திருக்கிறான். ஒரே ஜீன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











