மாதம்பட்டி ரங்கராஜ் வீடியோ ரிலீஸ்.. சீக்கிரம் வந்துடுனு உருகுறாரு.. ஜாய் கிரிஸில்டாவுக்கு முத்தம்லாம் பறக்குதே

சென்னை: இரண்டாவது திருமணத்தை மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக்கொண்டார் என்று மகளிர் ஆணையம் தெரிவித்திருந்த சூழலில் அதனை ரங்கராஜ் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனால் இந்த விவகாரம் மேற்கொண்டு பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் தன்னிடம் மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசிய வீடியோவை வெளியிட்டிருக்கிறார் ஜாய் கிரிஸில்டா.

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் இரண்டு பேரிடமும் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின்போது கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதை ரங்கராஜ் ஒத்துக்கொண்டார் என்று தெரிவித்த மகளிர் ஆணையம்; அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் துறைக்கு பரிந்துரை செய்தது.

மறுத்த ரங்கராஜ்: இதனையடுத்து ரங்கராஜ் ஒருவழியாக இரண்டாவது திருமணத்தையும், ஆண் குழந்தை தன்னுடையதுதான் என்பதையும் ஒத்துக்கொண்டார்; இது கிரிஸில்டாவுக்கு கிடைத்த வெற்றி என்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துவந்தார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "அனைவருக்கும் வணக்கம். மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை.

ஒத்துக்கொள்ளவே இல்லை: நான் ஜாய்யை தன்னிச்சையாக திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன். ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது.

பணம் பறிப்பதற்காக செய்யப்பட்டது: செப்டம்பர் 2025 இல், ஆயிரம் விளக்குகள், மகளிர் காவல் நிலையத்தின் புலனாய்வு அதிகாரி முன்பும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்திலும் விரிவான வாக்குமூலங்களை நான் ஏற்கனவே அளித்துள்ளேன், இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.

Joy Crizildaa releases romantic video of Mathampatty Rangaraj after he denies second marriage claim
Photo Credit:

டெஸ்ட்டுக்கு மறுக்கவில்லை: கமிஷனின் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ.1,50,000 பராமரிப்புத் தொகையாகவும், தனது BMW காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர EMI-யையும் செலுத்த வேண்டும் என்றும் கோரினார், நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன். நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை, மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால்(DNA Test), அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன். இந்த வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் செப்டம்பர் 2025 அன்றே பதிவுசெய்யப்பட்டுள்ளது" என குறிப்பிட்டு மேல் முரையீடு செய்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.

கிரிஸில்டாவின் வீடியோ: இந்நிலையில் தான் அவரை மிரட்டி திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கூறியிருந்த ஜாய் கிரிஸில்டா தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், "ஹே பொண்டாட்டி நீ எவ்ளோ அழகு தெரியுமா?.. அவ்வளவு அழகு. லவ் யூ. சீக்கிரம் வந்துடு மிஸ் பண்றேன். மிஸ் யூ. ரெடி ஆகிவிட்டேன்" என்று சொல்லி மாதம்பட்டி ரங்கராஜ் முத்தமும் கொடுத்திருக்கிறார். மேலும் அந்த வீடியோவுடன், “இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா??! மாதம்பட்டி ரங்கராஜ்

மக்களே, ப்ளீஸ் சொல்லுங்க - இதுல லவ் லா பேசுறாரா இல்ல மிரட்டலின் பெயரில் பேசுறாரா? கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்ற மாதிரி இந்த வீடியோ” எனவும் தெர்வித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X