நீ ஆம்பளையே இல்ல.. ஓடி ஒளிந்தாலும் விடமாட்டேன்.. மாதம்பட்டி ரங்கராஜை ரோஸ்ட் செய்த ஜாய் கிரிசில்டா!
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து இரண்டு ஆண்டுகள் தன்னுடன் வாழ்த்துவிட்டு, கருவுற்ற நிலையில், தன்னை விட்டு சென்றுவிட்டதாக ஜாய் கிரிசில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதுவீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா செப்டம்பர் மாதம் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தாமதமானதால், மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பியது. இதையடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிறிஸ்டில்லாவை திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக்கொண்டதாகவும், குழந்தை தன்னுடையது தான் என ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளிவந்தது.

ஜாய் கிரிசில்டா: இந்த செய்தியை மறுத்த மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டாவை என்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். நான் அவரை திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை, குழந்தைக்கு DNA test எடுக்க வேண்டும் என கூறி அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து, டிஎன்ஏடெஸ்டுக்கு நான் தயாராக இருக்கிறேன் என ஜாய் செய்தியாளரை சந்தித்து பேட்டி அளித்தார். மாதம்பட்டி ரங்கராஜ் அந்த அறிக்கைக்கு பிறகு அதைப்பற்றி கவலைப்படாமல் இருப்பதால், ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் DNA test வேண்டும் என கேட்டவரை காணவில்லை என தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.
ஆண் இல்ல: அந்த வகையில் ஜாய் கிரிஸில்டா இன்ஸ்டாகிராமில் புது வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஓய்... பொண்டாட்டி என வழக்கம் போல மாதம்பட்டி கொஞ்சி பேசி இருக்கிறார். அந்த வீடியோவை பதிவிட்டுள்ள ஜாய், "ஒரு பெண்ணின் வாழ்க்கையை சிதைத்து, ஒரு குழந்தையின் எதிர்காலத்தை கைவிட்டவன் ஆண் அல்ல."
ஒரு குழந்தைக்கு பெயர் கொடுக்க தைரியம் இல்லாதவன்... தந்தை என்ற உண்மையை விட்டு ஓட முடியாது... 2026ல் பெரிய சப்ரைஸ் வைட்டிங் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications