திருப்பி கொடுக்கும் நேரம் மாமே.. ஜாய் கிரிஸில்டா சொன்ன குழந்தைகள் தின வாழ்த்து.. இதிலும் அட்டாக்

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணத்தை ஒத்துக்கொள்ளாததை அடுத்து அவரை அட்டாக் செய்து போஸ்ட்டுகளை போட்டுவருகிறார் ஜாய் கிரிஸில்டா. ஆனால் ரங்கராஜோ அதற்கெல்லாம் ரியாக்ட் செய்யாமல் தனது தொழிலிலும், ஷூட்டிங்கிலும் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா சொல்லியிருக்கும் குழந்தைகள் தின வாழ்த்தும் இணையத்தில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஸ்ருதி என்பவரை திருமணம் செய்திருந்த சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ்; ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவையும் காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலும், ஜாயுடனான திருமணத்தை பதிவு செய்யாமலும் அனைத்து வேலைகளையும் முடித்திருந்தார். ஆனால் ஒருகட்டத்தில் ஒதுங்க முடிவு செய்ததை அடுத்து; கிரிஸில்டா கொந்தளிப்பாகி இந்த விஷயத்தை வீதிக்கு எடுத்து வந்துவிட்டார்.

ஆண் குழந்தை: காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு பேரிடமும் தீவிரமான விசாரணை நடைபெற்றது. அந்த சமயத்தில்தான் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் சூழலில் ரங்கராஜ் மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்த அவர்; இந்த போராட்டத்தில் வென்றுவிட்டதாகவே பலரும் கருதினார்கள். ஆனால் ரங்கராஜோ ட்விஸ்ட் அடித்துவிட்டார்.

Joy Crizildaa s Children s Day Post Targets Madhampatty Rangaraj Again
Photo Credit:

என்ன ட்விஸ்ட்?: அதாவது மகளிர் ஆணையம் செய்த விசாரணையில் இரண்டாவது திருமணத்தை ஒத்துக்கொண்டதாகவும்; பிறந்த குழந்தையையும் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவரோ, 'அதெல்லாம் இல்லை. என்னை மிரட்டித்தான் இந்தத் திருமணம் செய்தார். அந்தக் குழந்தை தன்னுடையதுதான் என்பதை டிஎன்ஏ டெஸ்ட் மூலம் உறுதி செய்தால். குழந்தையை ஏற்றுக்கொள்கிறேன்' என்றும் கூறினார்.

கடுப்பான ஜாய்: இது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை கூட்டியது. முக்கியமாக இப்போராட்டத்தி வென்றுவிட்டதாக நினைத்திருந்த ஜாய்க்கு பெரிய கடுப்பையும் உண்டு செய்துவிட்டது. இதற்கிடையே ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதியோ முழுக்க முழுக்க ஆதரவு கரத்தை நீட்டியிருக்கிறார். அது ரங்கராஜுக்கு மேற்கொண்டு புது தெம்பை கொடுத்திருக்கிறது. இருப்பினும் கிரிஸில்டா எப்படியாவது ரங்கராஜை வென்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் தின வாழ்த்து: தனக்கு பிறந்திருக்கும் குழந்தைக்கு ராகா ரங்கராஜ் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்நிலையில் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில் தனது வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார் ஜாய் கிரிஸில்டா. மூத்த மகன் தனது இளைய மகனுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, பின்னணியில் விஜய்யின் தீ தளபதி பாடலில் வரும் இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமே வரிகள் வரும்படி எடிட் செய்திருக்கிறார். இது பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேலும் இந்த வாழ்த்திலும் ரங்கராஜை அட்டாக் செய்யும்படியே போஸ்ட் போட்டிருக்கிறாரே என்றும் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X