கண்டா வர சொல்லுங்க.. மாதம்பட்டி ரங்கராஜை டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு கையோடு கூட்டி வாருங்க.. ஜாய் கிரிஸில்டா குசும்பு
சென்னை: ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதை ஒத்துக்கொள்ளாத மாதம்பட்டி ரங்கராஜ்; டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு வருவதாக கூறியிருந்தார். ஆனால் இன்னமும் அவர் சோதனைக்கு வரவில்லை என்று தெரிகிறது. கிரிஸில்டாவும் தொடர்ந்து அவரை டெஸ்ட்டுக்கு அழைத்துவருகிறார். இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜை பங்கமாக கலாய்த்திருப்பது சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.
ஸ்ருதியை திருமணம் செய்திருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவையும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணம் ரகசியமாக நடந்ததோடு மட்டுமின்றி; அதனை சட்டப்பூர்வமாக பதிவும் செய்யவில்லை. ஒருகட்டத்தில் இத்திருமண வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாதம்பட்டியார் ஒதுங்கியதாக தெரிகிறது. எனவே காவல் நிலையத்தில் அவர் மீது புகாரும் கொடுத்தார் ஜாய்.
மறுத்த ரங்கராஜ்: அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு பேரிடமும் விசாரணை நடந்தது. அந்த விசாரணையில் இரண்டாவது திருமணத்தை ஒத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் விசாரணை முடிந்த சில நாட்களிலேயே அதெல்லாம் ஒத்துக்கொள்ளவில்லை என்று ட்விஸ்ட் அடித்தார் ரங்கராஜ். இதற்கிடையே ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த ஆண் குழந்தையையும் ஏற்றுக்கொள்ளவில்லை; டி.என்.ஏ டெஸ்ட்டில் என்னுடைய குழந்தை என்று ஃப்ரூவ் ஆனால் ஏற்றுக்கொள்வேன் என கூறியிருந்தார்.

ஸ்ருதியின் சப்போர்ட்: ரங்கராஜ் இப்படியெல்லாம் பேசுவதை பார்த்து பலருக்கும் ஆச்சரியமே மிஞ்சியிருக்கிறது. அதுமட்டுமின்றி மகளிர் ஆணையம் சொன்ன விஷயத்தையே மறுக்கும் அளவுக்கு அவருக்கு செல்வாக்கு இருப்பதாக இரண்டாவது மனைவியும் கூறியிருந்தார். ஆனால் முதல் மனைவி ஸ்ருதியோ இந்த விஷயத்தில் இறுதிவரை என்னுடைய கணவரை நான் காப்பாற்றுவேன். அவருக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் உறுதி கொடுத்திருக்கிறார்.
சைலெண்ட் மோடில் ரங்கராஜ்: தன்னை சுற்றி இவ்வளவு நடந்தாலும் ரங்கராஜோ சைலெண்ட் மோடில் இருக்கிறார். ஆனால் ஜாய் கிரிஸில்டாவோ அவரை தொடர்ந்து விமர்சனம் செய்தும், கிண்டல் செய்தும் போஸ்ட்டுகளை போடுகிறார்.முக்கியமாக தனது குழந்தையின் புகைப்படங்கள் மற்றும் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்டவைகளை எல்லாம் பகிர்ந்து, ரங்கராஜுக்கு தந்தைக்கான தகுதியே இல்லை. ஆனாலும் வேறு வழியில்லாமல் அந்த ஸ்தானத்தை கொடுக்கிறேன் என்றும் தடாலடி காண்பித்திருந்தார்.
லேட்டஸ்ட் போஸ்ட்: இந்நிலையில் டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு வருவதாக சொல்லிவிட்டு வராமல் மாதம்பட்டி ரங்கராஜ் டிமிக்கி கொடுப்பதாக அவரது எதிர் தரப்பினர் சொல்ல ஆரம்பித்திருக்கும் நிலையில் ஜாய் கிரிஸில்டா நக்கலாக ஒரு போஸ்ட்டை போட்டிருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "யாராவது என் கணவர் மாதம்பட்டி ரங்கராஜை பார்த்தால் டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு வர சொல்லுங்கள். டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு வருவதாக ஸ்டேட்மெண்ட் கொடுத்து 15 நாட்கள் ஆகிவிட்டன. இப்போ எங்கே தலைமறைவா இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜே உங்களுக்கு தைரியமும், நேர்மையும் இருந்தால் டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு வாங்க" என்று அதிரடியாக அழைப்பு விடுத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











