என் மகன் அப்படி இல்லை.. மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக அதுதான் ஆதாரமே.. ஜாய் கிரிஸில்டா ஓபன் டாக்

சென்னை: ஜாய் கிரிஸில்டாவுக்கும், மாதம்பட்டி ரங்கராஜுக்கும் இடையேயான பிரச்னை கடந்த வருடத்திலிருந்தே ஓடிக்கொண்டிருக்கிறது. முதலில் இவ்விஷயத்தில் அமைதி காத்த மாதம்பட்டியார்; பிறகு தன்னை மிரட்டி ஜாய் திருமணம் செய்துகொண்டதாக கூறினார். மேலும் ஜாய்க்கு பிறந்திருக்கும் குழந்தை டி.என்.ஏ டெஸ்ட் மூலம் என்னுடையதுதான் என நிரூபிக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார். இதனையடுத்து அவர் டி.என்.ஏ சோதனையில் பங்கேற்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டிருக்கிறது.

விஜய் - சங்கீதா விவாகரத்து விவகாரம் இப்போது எப்படி உச்சத்தில் இருக்கிறதோ; அதேபோல் கடந்த வருடத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா பிரச்னைதான் இருந்தது. ஸ்ருதி என்ற மனைவி ஏற்கனவே இருக்கும்போது; அவருக்கே தெரியாமல் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார் ரங்கராஜ். மேலும் கர்ப்பமும் ஆகிவிட்டார். இப்படிப்பட்ட நிலைமையில் தன்னிடமிருந்து கணவர் விலகுவதை உணர்ந்த ஜாய்; அனைத்தையும் பொதுவெளிக்கு கொண்டு வந்தார்.

Joy Crizildaa s Viral Interview After Court Orders DNA Test for Madhampatti Rangaraj
Photo Credit:

விசாரணைக்கு மனைவியுடன் வந்த ரங்கராஜ்: முதலில் இந்த விஷயத்தில் ஆழ்ந்த மௌனத்தையே பதிலாக கொடுத்தார் மாதம்பட்டி. ஆனால் நாட்கள் செல்ல செல்ல நிலைமை எல்லாம் அவருக்கு சாதகமாக செல்லவில்லை. அதனையடுத்து மகளிர் ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரது முதல் மனைவி ஸ்ருதியும் வந்திருந்தது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. என்ன தவறு செய்தாலும் இப்படி கண்ணை மூடிக்கொண்டு மனைவி சப்போர்ட் செய்வதால்தான்; ஆண்கள் எந்த எல்லைக்கும் செல்கிறார்கள் என கண்டனங்கள் வலுத்தன.

ஜாய்க்கு பிறந்த குழந்தை: இதற்கிடையே ஜாய் கிரிஸில்டாவுக்கு மகனும் பிறந்துவிட்டார். தானும், ரங்கராஜும் முடிவு செய்தபடி ராகா ரங்கராஜ் என பெயரும் வைத்தார். இப்படிப்பட்ட சூழலில்தான் முதல் மனைவியோடு ஆஜரானார். அந்த விசாரணையின்போது, 'என்னை மிரட்டி திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள வைத்தார்கள். பிறந்திருக்கும் குழந்தை என்னுடையதுதான் என்பதை டி.என்.ஏ டெஸ்ட் மூலம் நிரூபித்தால்; வாழும் காலம் வரை அந்த குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்வேன்' என்றும் கூறியிருந்தார். இதனால் ஒருவழியாக பிரச்னை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

Also Read
K Bye.. திரிஷாவின் இன்ஸ்டாவை பார்த்தீங்களா?.. என்ன சொல்ல வராங்க?.. மேடம் செம ஜாலிதான் போங்க
K Bye.. திரிஷாவின் இன்ஸ்டாவை பார்த்தீங்களா?.. என்ன சொல்ல வராங்க?.. மேடம் செம ஜாலிதான் போங்க

வராத மாதம்பட்டி: ஆனால் விசாரணையில் அப்படி சொல்லி சென்றவர்; அதற்கு பிறகு டி.என்.ஏ பரிசோதனையில் பங்கேற்கவே இல்லை. ஜாயும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரமாரியாக விமர்சித்தும், ரங்கராஜ் டி.என்.ஏ டெஸ்ட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் போஸ்ட்டுகளாக போட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அவர் எதற்கும் அசைவதாக தெரியவில்லை. இப்படிப்பட்ட நிலைமையில்தான் சில நாட்களுக்கு முன்பு, 'மாதம்பட்டி ரங்கராஜ் டி.என்.ஏ டெஸ்ட்டில் கலந்துகொள்ள வேண்டும்' என நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. இதனால் ஜாய் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். தனது மகனின் முகத்தையும் நெட்டிசன்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவின் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "எனது மகன் அவனது அப்பா மாதிரி இருப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. அதுதானே அவருக்கு எதிரான மிகப்பெரிய ஆதாரம். மேலும் என்னுடைய குழந்தையின் முகத்தை மறைத்து ஃபோட்டோக்களை போட்டும்போதெல்லாம்; உங்கள் மகன் என்ன செலிபிரிட்டி குழந்தையா என கேள்வி கேட்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. அவன் சாதாரண குழந்தைதான்" என்றிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X