மாதம்பட்டி ரங்கராஜின் கார்பன் காப்பி.. மகன் ஃபோட்டோவை பகிர்ந்த ஜாய் கிரிஸில்டா

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டாவுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. பிரச்னைகளுக்கு மத்தியில் பிறந்திருக்கும் மகனை நினைத்து அவர் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார். பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் மகன் பற்றி ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்.

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவும், சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்திருந்தார்கள். இரண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும். அதேசமயம் ஜாய் முதல் திருமண உறவிலிருந்து சட்டப்பூர்வமாக வெளியே வந்துவிட்டார். ஆனால் ரங்கராஜோ முதல் மனைவி ஸ்ருதியை சட்டப்பூர்வமாக பிரியவில்லை எனது குறிப்பிடத்தக்கது.

பற்றி எரியும் பிரச்னை: அவர் விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரும் அளித்தார் இரண்டாவது மனைவி. இதுதொடர்பான பிரச்னை தொடர்ந்துகொண்டிருக்க; தன்னை பற்றி பேச தடை விதிக்க வேண்டும் என ஜாய்க்கு எதிராக நீதிமன்றத்தில் மாதம்பட்டி மனுத்தாக்கல் செய்தாலும் அதனை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

Joy Crizildaa shares a photo of her newborn son who looks just like Madhampatty Rangaraj
Photo Credit:

ஜாய் கிரிஸில்டா தாக்கல் செய்த புதிய மனு: இதனையடுத்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் ரங்கராஜ். பிறகு தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் சில நாட்களுக்கு முன்பு மகளிர் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராகவும் செய்தார். இது ஒருபக்கம் இருக்க நேற்று முன்தினம் கிரிஸில்டா தாக்கல் செய்திருந்த ஒரு மனுவில், 'முன்னர் போல் ஆடை வடிவமைப்பு செய்ய முடியாததால் தனக்கு ரங்கராஜ் மாதம் 6.50 லட்சம் ரூபாய் பராமரிப்பு செலவுக்கு தர உத்தரவிட வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருந்தார்.

ஆண் குழந்தை பிறந்தது: இதனால் அடுத்தக்கட்டமாக ரங்கராஜ் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி பலரும் எழுந்திருந்தது. இப்படிப்பட்ட சூழலில் நேற்று ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார். பல பிரச்னைகளுக்கு மத்தியில் பிறந்திருக்கும் அந்த பிஞ்சுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். ஏற்கனவே ரங்கராஜுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

அப்படியே அப்பா முகம்: தற்போது பிறந்திருக்கும் மூன்றாவது மகனையும் அன்போடு ரங்கராஜ் வளர்க்க வேண்டும் என்றும்; எந்த ஈகோவையும் காட்டக்கூடாது, அந்த பிஞ்சை ஒதுக்கக்கூடாது என்று பலரும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா தனது மகனின் கையை பிடித்திருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, 'அச்சு அசல் அப்பாவின் முகம்..ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ்.. ராகா ரங்கராஜ்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் புகைப்படம் இப்போது பயங்கரமாக ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.

More from Filmibeat

Read more about: madhampatty rangaraj
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X