ராஜாக்கள் வளர்கிறார்கள்.. இரண்டு மகன்களை நினைத்து ஜாய் கிரிஸில்டா பூரிப்பு.. சூப்பர் க்யூட்

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா புகார் கொடுத்த சில மாதங்களில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஒரு உயிர் வந்திருப்பதால் இந்தப் பிரச்னைக்கு கண்டிப்பாக முற்றுப்புள்ளி வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரங்கராஜோ டி.என்.ஏ டெஸ்ட்டை கேட்டுவிட்டு அதற்கு செல்லாமல் காலம் தாழ்த்திவருகிறார். சூழல் இப்படி இருக்க் ஜாய் கிரிஸில்டா புதிய போஸ்ட் ஒன்றை போட்டிருக்கிறார்.

ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குநர் ஜெ.ஜெ. ஃபெட்ரிக்கின் முன்னாள் மனைவி ஜாய் கிரிஸில்டா. அந்தத் தம்பதிக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால் இரண்டு பேரும் சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்துவிட்டார்கள். அவரை பிரிந்த ஜாய்க்கு பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாற; இரண்டு பேரும் ரகசிய திருமணம் செய்துகொண்டார்கள். ரங்கராஜுக்கும் இது இரண்டாவது திருமணம்.

பிரச்னை: திருமணம் முடிந்த கையோடு ஜாய் கிரிஸில்டா கர்ப்பமும் ஆனார். இப்படிப்பட்ட நிலைமையில் அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே பிரச்னை ஏற்பட; அது முற்றிப்போனதையடுத்து காவல் துறைக்கு எடுத்துவந்தார் ஜாய். அதனையடுத்து பல திருப்பங்களுடன் இந்த விவகாரம் செல்ல; ஒருவழியாக மகளிர் ஆணையத்தில் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் ஆஜரானார் ரங்கராஜ். அப்போது கிரிஸில்டா தன்னை மிரட்டித்தான் அந்தத் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள வைத்ததாக கூறினார்.

Joy Crizildaa Shares Emotional Post of Her Sons Amid Ongoing Issue with Madhampatty Rangaraj
Photo Credit:

ஆண் குழந்தை பிறந்தது: இதற்கிடையே ஜாய்க்கு ஆண் குழந்தை பிறந்தது. எனவே பிறந்திருக்கும் மகனை பார்த்தாவது மாதம்பட்டி மனம் இறங்கிவருவார் என்று எதிர்பார்க்க; அவரோ அந்த உயிர் தனக்கு பிறந்ததுதான் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ டெஸ்ட் கேட்டிருக்கிறார். அப்படி கேட்டவரோ இன்றுவரை அந்த பரிசோதனைக்கு செல்லாமல் காலம் தாழ்த்தி வருவது ஏன் என்று அவருக்கே தெரியும். அவரை எப்படியாவது இந்த பரிசோதனைக்கு வரவழைக்க கிரிஸில்டா பல வழிகளில் முயற்சிக்கிறார்.

சோஷியல் மீடியா ஒரு வழி: அதில் ஒன்று சோஷியல் மீடியாவில் போஸ்ட்டுகளாக போடுவது. கிண்டல், கோபம், சாபம் என அத்தனையிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை இறக்கிக்கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் அது ரசிக்கப்பட்டாலும் போகப்போக ரசிகர்களுக்கு, 'இது எப்போ முடியும்' என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. போதாக்குறைக்கு கிரிஸில்டாவை ரங்கராஜ் கொஞ்சுவதாக நினைத்து ஏதோ செய்யும் வீடியோவையும் போஸ்ட் செய்துவருகிறார். அது கடுமையான ட்ரோல் மெட்டீரியலாகவும் மாறிவருகிறது.

புதிய புகைப்படங்கள்: இந்நிலையில் இப்போது தனக்கு பிறந்த மகனை முதல் கணவனுக்கு பிறந்த மகன் கொஞ்சுவதை புகைப்படம் எடுத்து பகிர்ந்திருக்கிறார். மேலும் அதனுடன், "ராஜாக்கள் வளர்கிறார்கள். நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு தைரியமான முடிவுக்கு பின் நீங்கள்தான் இருக்கிறீர்கள். என்னுடைய முதல் லிட்டில் ஹீரோ அவனுடைய சகோதரனை பாதுகாக்கிறான்" என்று எமோஷனலாக குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X