மகனுடன் ஜாய் கிரிஸில்டா.. குழந்தை செம க்யூட்.. லிட்டில் சிம்பாவை எப்படி வெச்சிருக்காங்க பாருங்க
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் கொடுத்து; அவர் மீது தொடர்ந்து அட்டாக் செய்துவரும் ஜாய் கிரிஸில்டா கடந்த வருடம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். மகனுக்கு ராகா ரங்கராஜ் என்று பெயர் வைத்திருக்கிறார். பிறந்திருக்கும் குழந்தை தன்னுடையதுதான் என்பதை டி.என்.ஏ டெஸ்ட் மூலம் நிரூபிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த ரங்கராஜோ; இன்றுவரை அந்த டெஸ்ட்டில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா விவகாரம் கடந்த வருடத்திலிருந்து ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் முதல் மனைவி ஸ்ருதியுடன் ஆஜரானார் மாதம்பட்டி ரங்கராஜ். அப்போது தன்னை மிரட்டி திருமணம் செய்ய வைத்தார்கள் என்று ஒரே போடாக போட்டார். அந்த விசாரணை நடந்த காலகட்டத்தில்தான் ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.
டி.என்.ஏ டெஸ்ட்: விசாரணையின்போது அந்தக் குழந்தை குறித்து பேசிய மாதம்பட்டியார், 'பிறந்திருக்கும் குழந்தை தன்னுடையதுதான் என்பதை டி.என்.ஏ டெஸ்ட் மூலம் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால் குழந்தையை ஏற்றுக்கொண்டு காலம் முழுக்க பார்த்துக்கொள்ள தயார்' எனவும் தெரிவித்தார். அப்படி சொன்னவர் இன்றுவரை அந்த டெஸ்ட்டில் பங்கேற்கவில்லை என்பது தனிக்கதை. போல்டாக டெஸ்ட்டை கேட்டவர்; ஏன் இன்னமும் டெஸ்ட்டுக்கு செல்லவில்லை என்பது பலரது கேள்வியாக இருக்கிறது.

விடாத ஜாய் கிரிஸில்டா: ஜாய் கிரிஸில்டாவுடம் எப்படியாவது ரங்கராஜை அந்த டெஸ்ட்டுக்கு வர வைக்க வேண்டும் என ஏகப்பட்ட முயற்சிகளை செய்தார். அது எதுவுமே பலனளிக்கவில்லை. சமீபத்தில் அளித்த புதிய புகாரில், ரங்கராஜ் மீது ஜாமீனில் வெளியே வர முடியாதபடி வழக்கு தொடர வேண்டும். எனது குழந்தைகளை கவனிக்க அவரிடமிருந்து பணம் பெற்று தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். ரங்கராஜோ இதெல்லாம் கண்டுகொள்ளாமல் முதல் மனைவியுடன் கூலாக இருக்கிறார்.
எப்போது முடிவுக்கு வரும்?: இவர்களது விவகாரம் கடந்த வருடத்திலிருந்து சிந்துபாத் கதை போல் நீண்டுகொண்டே செல்கிறது. குழந்தை பிறந்த பிறகு கண்டிப்பாக ரங்கராஜுக்குள் ஒரு மாற்றம் வரும் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் துளிகூட அசைந்துகொடுக்கவில்லை. இதன் காரணமாக இவர்களது பிரச்னை எப்போதுதான் முடிவுக்கு வரும் என ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் தொடார்ந்து கேட்க ஆர்மபித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
ஜாய் கிரிஸில்டாவின் புதிய போஸ்ட்: இந்நிலையில் இத்தனை நாட்கள் குழந்தையை பொதுவெளிக்கு காண்பிக்காமல் இருந்த ஜாய் கிரிஸில்டா; இப்போது அவரை அணைத்தபடி ஒரு ஃபோட்டோவை பகிர்ந்திருக்கிறார். அதில் குழந்தையின் முகம் தெரியவில்லை. இருந்தாலும் ராகா செம க்யூட்டாக இருக்கிறார். அந்த புகைப்படத்தோடு, 'நாம் எவ்வளவு தைரியசாலிகள் என்பதை ஒரு நாள் நீ புரிந்துகொள்வாய். உனது முகத்தை பார்த்தபோது, நான் இதற்கு முன்பு இருந்ததைவிடவும் அதிக வலிமையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்" என கேப்ஷன் போட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











