மகனுக்கு பெயர் சூட்டிய ஜாய் கிரிசல்ட்டா.. அடடே பதிவே செஞ்சுட்டாங்களா.. ரொம்ப ஸ்பீடா இருக்காங்களே!

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பின்னர் இரண்டு ஆண்டுகள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருந்த ஜாய் கிரிசல்ட்டா தற்போது பிரச்னை மேல் பிரச்னைகளை சந்தித்து வருகிறார். இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் அவருக்கு இருக்கும் ஒரு ஆறுதல் அவருக்கு பிறந்துள்ள ஆண் குழந்தைதான். இந்நிலையில் தனது ஆண் குழந்தைக்கு அவர் பெயரிட்டுள்ளார். மேலும் அதை அரசு ஆவணங்களில் பதிவும் செய்துள்ளார். இது தொடர்பாக இந்த தொகுப்பில் காணலாம்.

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசல்ட்டா இடையிலான பிரச்னை என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஜாய் கிரிசல்ட்டா புகார் அளித்ததில் இருந்து இந்த பிரச்னை தொடங்கி, முதலமைச்சரை டேக் செய்து நீதி வேண்டும் அப்பா என பதிவிட்டு, தற்போது விசாரணை, வழக்கு என நடைபெற்றுக் கொண்டுள்ளது. கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கும் போது ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார் ஜாய். இப்படி இருக்கையில் கடந்த வாரத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

joy crizildaa Shares Her New Born Boy Baby Name And Registration Fans Wish Them Lot

கிரிசல்ட்டாவுக்கு குழந்தை பிறந்த பின்னர்தான் பிரச்னை மேலும் அதிகரித்தது. மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்த தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே, குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர், ஜாய் கிரிசல்ட்டா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட, அதன் பின்னர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது முதல் மனைவி ஸ்ருதி என இருவரும் இணைந்து சமூக வலைதளங்களில் பதிலுக்கு அவர்கள் தரப்பில் பதிவுகளை இறக்க, இவர்களுக்கு இடையில் பெரிய வார்த்தைப் போரே நடைபெற்றுக் கொண்டிருந்தது.

பதிலடி: ஜாய் எங்களை ஏமாற்றுகிறார் என்று மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஸ்ருதி கூற, ஜாய் கிரிசல்ட்டாவோ, மாதம்பட்டி ரங்கராஜ் என்னையும் ஏமாற்றிவிட்டார், ஸ்ருதியையும் ஏமாற்றிவிட்டார். மேலும் பல பெண்களையும் ஏமாற்றியுள்ளார். அதற்கான ஆதாரங்கள் என்னிடத்தில் உள்ளது என்று குண்டைத் தூக்கிப் போட இவர்களின் வாக்குவாதம் பெரும் பேசு பொருளாக மாறியது.

joy crizildaa Shares Her New Born Boy Baby Name And Registration Fans Wish Them Lot

மகனுக்கு பெயர்: இந்நிலையில் ஜாய் கிரிசல்ட்டா தனது மகனுக்கு பெயர் சூட்டி, அந்த பெயரை அரசு ஆவணங்களில் பதிவும் செய்துள்ளார். அது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, " கடந்த 31/10/2025 ஆம் தேதி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது என்றும், அந்த ஆண் குழந்தைக்கு ராஹா ரங்கராஜ் என்று பெயர் வைத்துள்ளோம் என்றும் விண்ணப்பத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவை பார்த்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X