நீயெல்லாம் ஆம்பளையா ரங்கராஜ்? உடலுறவும் பிளாக்மெயிலா? கண்ணீருடன் விளாசி விட்ட ஜாய் கிரிசல்ட்டா!
சென்னை: ஜாய் கிரிசல்ட்டா - மாதம்பட்டி ரங்கராஜ் பிரச்னை கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இவர்களுக்கு சில தினங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்தது. இப்படி இருக்கும்போது இன்று அதாவது நவம்பர் 5ஆம் தேதி ரங்கராஜ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜாய் என்னை மிரட்டி தான் திருமணம் செய்து கொள்ள வைத்தார் என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தற்போது ஜாய் கிரிசல்ட்டா வீடியோ வெளியிட்டுள்ளார். இதில் அவர் பல திடுக்கிடும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அதாவது, மொத்தம் இரண்டு வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதில், " மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக நான் பேசலாம் என்று நினைக்கிறேன். விசாரணையின் போது அந்த குழந்தை என்னுடையதுதான், டி.என். ஏ டெஸ்ட் எல்லாம் தேவையில்லை என்று கூறினார். தனது குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்து தான் என்னை திருமணம் செய்து கொண்டார். இன்றைக்கு கோவை பகுதியில் இது மாதம்பட்டி ரங்கராஜின் குழந்தை இல்லை என்று அவரது குடும்பதினர் பரப்பி வருகிறார்கள். இவர்கள் எல்லாம் கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கே சென்றார்கள்.

தனது குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் போது, ஒரு அப்பாவாக ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை அந்த குழந்தையின் சாபத்திற்கு அவர் கட்டாயம் ஆளாவார். அந்த குழந்தையின் சாபம் அவரைச் சும்மா விடாது. விசாரணையில் சொன்னதற்கு நேர் மாறாக அவர் ஏன் கூறுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் எப்படி இப்படி பொய் சொல்கிறார் என்று தெரியவில்லை.
ஆதாரம்: விசாரணையில் சொன்னதை மாற்றிச் சொல்கிறார் என்றால் அதற்கு ஆதாரம் வேண்டும், ஆனால் இவர் ஏன் பொய் சொல்கிறார், அவரது குடும்பத்தினர் மிரட்டிச் சொல்ல வைக்கிறார்களா என்று தெரியவில்லை. விசாரணையில் அவர் சொன்னது, " எனது முதல் மனைவியை அறைக்கு வெளியே வைத்துக் கொண்டுதான் இதைச் சொல்கிறேன். 12 ஆண்டுகளுக்குப் பின்னர் எனக்கு கிடைத்த நல்ல உறவு ஜாய் கிரிசல்ட்டா, அவரைப் போல என்னை வேறு யாரும் நன்றாக பார்த்துக் கொண்டது இல்லை. எனது வக்கீல் சொன்னதை எல்லாம் நான் மனதில் வைத்துக் கொள்ளவில்லை. எனது மனதில் இருந்து பேசுகிறேன் என்று சொன்னார். நான் மிரட்டி தான் திருமணம் செய்து வைத்தேன் என்றால், விசாரணையில் நான் மிரட்டியா அவர் அப்படிச் சொன்னார்?.
உடலுறவும் பிளாக்மெயிலா: என்னிடத்தில் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் உள்ளது. அவற்றை எல்லாம் வெளியிட்டால் அவர் விருப்பப்பட்டு என்னுடன் வாழ்ந்தாரா இல்லை மிரட்டலில் இருந்தாரா என்பது தெரிந்துவிடும். எல்லாம் பிளாக் மெயில் என்றால் நீங்கள் என்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டதும் பிளாக் மெயிலா? அதை மட்டும் ஏன் உங்கள் அறிக்கையில் குறிப்பிடவில்லை. ஏனென்றால் அது உங்கள் தேவை. ஆம்பிளையாக இருந்தால் நீதிமன்றத்திற்குச் சென்று டி.என்.ஏ டெஸ்க்கு உத்தரவு வாங்கி வாருங்கள். அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றுக் கொண்ட அனைவரையும் கடவுளாக பார்க்கிறேன்" என்றும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இவரது இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











