ஜாய் கிரிஸில்டா - மாதம்பட்டி ரங்கராஜ் திருமண நாளாம்.. எப்படி வாழ்த்து சொல்லிருக்காங்க பாருங்களேன்
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜுக்கும், ஜாய் கிரிஸில்டாவுக்கும் நடந்த ரகசிய திருமணம் சில மாதங்களுக்கு முன்பு பொதுவெளிக்கு தெரியவந்தது. காவல் துறையில் புகார், மகளிர் ஆணையத்தில் விசாரணை என பல கட்டங்களை கடந்தும் இவ்விவகாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. டி.என்.ஏ டெஸ்ட் கேட்ட மாதம்பட்டி ரங்கராஜ்; அதில் கலந்துகொள்ளாமல் காலம் தாழ்த்திவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொன்மகள் வந்தாள் இயக்குநர் ஃபெட்ரிக்கை திருமணம் செய்து பிறகு விவாகரத்து பெற்ற ஜாய் கிரிஸில்டா; அடுத்ததாக மாதம்பட்டி ரங்கராஜை காதலித்ததாக தெரிகிறது. இரண்டு பேரின் காதலும் திருமணம்வரை சென்றது. இருவருக்கும் எப்போது திருமணம் நடந்தது என்று தெரியவில்லை; ஆனால் இத்திருமண விஷயம் தெரிந்தபோது கிரிஸில்டா கர்ப்பிணியாக இருந்தார். இதனால் இவ்விவகாரம் மேலும் அதிர்ச்சியை கிளப்பியது. காவல் துறையில் அவர் அளித்த புகாரை அடுத்து தினம் ஒரு காட்சியாக இந்த விஷயம் விரிந்துகொண்டிருக்கிறது.
பிறந்த ஆண் குழந்தை: முதலில் இதுகுறித்து எதுவுமே பேசாமல்தான் இருந்தார் ரங்கராஜ். ஆனால் ஜாய் கிரிஸில்டா ஆண் குழந்தையை பெற்றதையடுத்து பேச வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். மகளிர் ஆணையத்தில் நடந்த விசாரணையில் முதல் மனைவியுடன் ஆஜரான மாதம்பட்டியார்; தன்னை மிரட்டித்தான் திருமணம் செய்ய வைத்தார்கள். டி.என்.ஏ டெஸ்ட்டில் இந்தக் குழந்தை என்னுடையதுதான் என நிரூபியுங்கள் எனவும் கூறிவிட்டார்.

காலம் தாழ்த்தும் மாதம்பட்டி: ஆனால் அப்படி டெஸ்ட் கேட்டவர் இன்றுவரை அதில் கலந்துகொள்ளாமல் காலம் தாழ்த்திவருகிறார். அவரை வரவழைப்பதற்கு ஏகப்பட்ட வழிகளில் கிரிஸில்டா செய்யும் முயற்சிகள் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. ரங்கராஜோ தனது சமையல் டீமுடன் பல நிகழ்ச்சிகளில் சமையல் செய்துகொண்டு பிஸியாக இருக்கிறார். ஏகப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு தனது முதல் மனைவி ஸ்ருதியுடனும் தவறாமல் ஆஜராகிவிடுகிறார். இந்த விஷயத்தில் ரங்கராஜுக்கு முழு ஆதரவையும் ஸ்ருதி கொடுத்துவருவது தனி கதை.
புதிய புகார்: தன் மீது உண்மையில் தவறு இல்லையென்றால் டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு செல்ல வேண்டியதுதானே என ரசிகர்களும் குரல்களை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவரோ எதையும் கண்டுகொள்வதில்லை. இது ஒருபக்கம் இருக்க அவர் மீது ஜாமீனில் வெளியே வராதபடி வழக்குப்பதிவு செய்ய வேண்டும். வீட்டு ஒப்பந்தம் முடிவதாலும், இரண்டு குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டியிருப்பதாலும் தனக்கு அவரிடமிருந்து பணம் பெற்று தர வேண்டும் என்றும் சில நாட்களுக்கு முன்புகூட மீண்டும் புகார் கொடுத்தார் ஜாய்.
திருமண நாள் வாழ்த்து: இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா - மாதம்பட்டி ரங்கராஜ் தம்பதிக்கு இன்று திருமண நாளாம். அதனையொட்டி தனக்கு அவர் தாலி கட்டும் புகைப்படத்தை பகிர்ந்து, 'திருமண நாள் வாழ்த்துகள் மை சோ கால்டு கணவர்' என இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார்.மேலும் அதே போஸ்ட்டில், அவளை உடைக்க நினைத்த எல்லாத்துக்கும் ஒரே பதில்... அவளோட தைரியம்" என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications