கல்யாணமும் செஞ்சு.. குழந்தையும் கொடுத்துட்டு எஸ்கேப் ஆகிடுவாங்க.. புருஷன் வெர்ஷன் 5.O - ஜாய் கிரிசல்ட்டா

சென்னை: பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்ட்டா - மாதம்பட்டி ரங்கராஜ் பிரச்னை இன்னும் ஓய்ந்ததாக இல்லை. நடப்பதை எல்லாம் பார்க்கும்போது, ஜாய் கிரிசல்ட்டா நாளுக்கு நாள் இறங்கி சிக்ஸர் அடித்து வருகிறாரோ என்ற பேச்சு இணையதளத்தில் ஏற்படும் அளவுக்கு இருக்கிறது. மாதம்பட்டி ரங்கராஜ் மாதத்திற்கு ஒரு அறிக்கை விட்டால், ஜாய் கிரிசல்ட்டா வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று வீடியோக்களை இறக்கி மாதம்பட்டி ரங்கராஜை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜின் புதிய வீடியோ ஒன்றை அனுப்பி, புருஷன் வெர்ஷன் 5.O என்று விமர்சித்துள்ளார்.

நடிகர் மற்றும் சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசல்ட்டா விவகாரம் ஊர் அறிந்தது தான் என்றாலும் இவர்களுக்கு இடையிலான பிரச்னைக்கு எப்போதுதான் ஒரு முடிவு வரும் என்ற கேள்வி இல்லாமல் இல்லை. தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ், அவர் முதல் திருமணம் செய்தவர், அந்த திருமணம் விவாகரத்து ஆகவில்லை என்று தெரிந்து திருமணம் செய்து கொண்ட ஜாய் கிரிசல்ட்டா என, இந்த பிரச்னையின் ஆரம்பம் எது, தவறு எது என்று குழப்பும் அளவுக்கு இருக்கிறது.

கடந்த அக்டோபர் மாதத்தின் இறுதியில் ஜாய் கிரிசல்ட்டாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அப்பா மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்று கர்ப்பமாக இருக்கும் காலத்தில் இருந்தே தெரிவித்து வந்தார் ஜாய் கிரிசல்ட்டா. முன்னர் அமைதியாக இருந்த மாதம்பட்டி ரங்கராஜ், குழந்தை பிறந்த பின்னர், அந்த குழந்தைக்கு அப்பா நான் என்றால், அந்த குழந்தைக்கான முழுப்பொறுப்பையும் நான் ஏற்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டார்.

கோபம்: மாதம்பட்டி ரங்கராஜின் இந்த அறிக்கைக்கு பின்னர் ஜாய் கிரிசல்ட்டா மிகவும் கோபமாக சில வீடியோக்களை வெளியிட்டார். அதில், விசாரணையின் போது டி.என்.ஏ டெஸ்ட் தேவையில்லை, அந்த குழந்தைக்கு அப்பா நான் தான் என்று மாதம்பட்டி ரங்கராஜ் வாக்குமூலமே கொடுத்ததாகவும், ஜாய் கிரிசல்ட்டா கூறியிருந்தார். அத்துடன், இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை, மாதம்பட்டி ரங்கராஜை கண்டா வரச்சொல்லுங்க, டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவுக்குப் பின்னர் மாதம்பட்டி ரங்கராஜைக் காணவில்லை என்று தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் ஜாய் கிரிசல்ட்டா.

Joy Crizildaa Slams Madhampatty Rangaraj As Husband Version 5 O
Photo Credit:

DNA: : கடந்த வாரத்தில் வெளியிட்டிருந்த பதிவு ஒன்றில், " மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தைதனமான செயல்களில் ஈடுபடுகிறார். எனது தொலைபேசி எண்ணை தெரியாதவர்களிடம் பகிர்ந்து, மெசேஜ் அனுப்ப சொல்லுகிறார். மாதம்பட்டி ரங்கராஜ் இதுபோன்ற குழந்தைத்தனமான செயல்களில் ஈடுபடுவார் என நான் நினைக்கவில்லை, என்னை எல்லா வகையிலும் மாதம்பட்டி ரங்கராஜ் தாக்க முயல்கிறார். மாதம்பட்டி ரங்கராஜ் வைத்திருக்கும் பணம் பத்தும் செய்யும்" என்றும், " என்னை வீழ்த்துவதற்கு ஒரு கூட்டணியே வைத்து வேலை செய்து வருகிறார் எனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ்" என்றும் பதிவிட்டிருந்தார்.

புருஷன் வெர்ஷன் 5.O: தற்போது, புருஷன் வெர்ஷன் 5.O. இப்படித்தான் லவ் யூ, மிஸ் யூ சொல்லி, நம்மள கல்யாணம் பண்ணுவாங்க, குழந்தையும் கொடுப்பாங்க. கடைசியாக எஸ்கேப் ஆகிடுவாங்க. டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கனும்னு சொல்லுவாரு, ஆனா டெஸ்ட் எடுக்க வர மாட்டாரு என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X